முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கென பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் எந்த நாளில் முருகப்பெருமானை வழிபாடு செய்தால் என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் அப்படிப்பட்ட முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை என்று நாம் வழிபாடு செய்யும் பொழுது நம் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். செவ்வாய் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும் செவ்வாய் தோஷம் நீங்கும் செவ்வாய்க்கிழமை என்று செய்யக்கூடிய முருகப்பெருமான் வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

முருகப்பெருமான் வழிபாடு
முருகப்பெருமானுக்கு பலவகையான மந்திரங்கள் உள்ளது. முருகப்பெருமானுக்கு உகந்த நாள் அன்று வெற்றிலை தீபம் ஏற்றி வழிபட்டால் பலவிதமான பிரச்சனைகள் தீரும் நாம் கேட்டது கிடைக்கும். அதிலும் முருக பெருமானுடைய மந்திரத்தை கூறி வழிபட்டால் நிச்சயமாக அனைத்து சிக்கல்களுமே தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம். முருகப்பெருமானுக்குரிய சிறப்பு வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை எந்த முறையில் கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
முருகப்பெருமான் மந்திரம்
இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை என்று கூறுவது சிறப்பானது பக்கத்தில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்துவிட்டு முருகப்பெருமானுடைய இந்த மந்திரத்தை 21 முறை உச்சரிக்க வேண்டும்.
மந்திரம்
“ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம்
க்லீம் க்லௌம் சௌம் நமஹ”
தொடர்ந்து 48 நாட்கள் முருகனுக்கு விரதம் இருந்து தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை நாம் உச்சரிக்கும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். முருகப்பெருமானுடைய பரிபூரணமான அருளையும் நம்மால் பெற முடியும் செவ்வாய்க்கிழமை என்றும் முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்து அவருடைய அருளை முழுவதுமாக பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : நினைத்தது நடப்பதற்கு முருக பெருமான் சஷ்டி வழிபாடு!!


