அனைவருடைய வாழ்க்கையிலும் நிறைய பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருப்போம். பல வழிபாடுகள் பரிகாரங்கள் செய்திருப்போம். இருந்தாலும் ஒரு சில பிரச்சினைகள் நம்மை விட்டு செல்லாமல் நம்மை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும். அப்படி கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க கூடிய பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு சிவபெருமானின் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யலாம். அப்படி எந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்தால் நல்லது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

கர்ம வினைகள்
நம்முடைய பிரச்சனைகளுக்கு காரணம் கர்ம வினைகள் தான் அந்த கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர்தான் சிவபெருமான். அதனால் சிவபெருமானை நாம் தஞ்சம் அடைந்தால் கர்ம வினைகள் அனைத்தும் காணாமல் போய்விடும் கர்ம வினைகளால் வந்த பிரச்சனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும். ஒரு சில கோவில்களுக்கு நாம் சென்று வழிபாடு செய்யும்போது அந்த கர்மவினைகள் சீக்கிரத்திலேயே ஏத்துகிறோம். அப்படிப்பட்ட ஒரு கோவில்தான் இப்பொழுது நாம் பார்க்க போகின்ற கோவில்.
வழக்காதீஸ்வரர் கோவில்
இந்த கோவில் சின்ன காஞ்சிபுரம் என்று கூறக்கூடிய இடத்தில் உள்ளது இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்கு வழக்காதீஸ்வரர் என்ற ஒரு பெயர் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்பவர்களுடைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வழக்குகள் மட்டுமில்லாமல் நம்முடைய பிரச்சினைகளும் தீரும் எனவே இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் அதற்கென சில வழிமுறைகளும் உள்ளது.
வழக்காதீஸ்வரர் வழிபாடு
இந்த வழிபாட்டை திங்கள்கிழமை செய்ய வேண்டும் ஒரு வெள்ளை நிற பேப்பரில் உங்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளதோ அனைத்தும் எழுதி கொள்ள வேண்டும் முந்தைய நாள் அன்றே எழுதிக் கொள்வது நல்லது. மறுநாள் திங்கட்கிழமை என்று காலையில் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் சிவபெருமானுக்கு முன்பாக 16 அகல் விளக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம் மாவிளக்கு ஏற்றினாலும் நல்லது. அதேபோல் உங்களால் இயன்ற சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம் வில்வ இலைகள் மலர்கள் அபிஷேகத்திற்குரிய பொருட்கள் அனைத்தும் வாங்கித் தருவது சிறப்பானது சிவபெருமானின் பாதத்தில் நாம் எழுதிக் கொண்டு வந்த அந்த வெள்ளை நிற பேப்பரை வைத்து சிவபெருமானை 16 முறை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். நீங்கள் எழுதிய ஒவ்வொரு பிரச்சினைகளும் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். என்ன பிரச்சனையாக இருந்தாலும் அதனை சிவபெருமானின் பாதத்தில் சமர்ப்பணம் செய்துவிட்டால் போதும் அவருடைய அருளால் அனைத்து பிரச்சினைகளும் நீங்க நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
இதனையும் படியுங்கள் : கடனை முழுமையாக அடைக்கும் கோ பரிகாரம்


