இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் பணம் சம்பாதிக்க தான் பல விதங்களில் முயற்சி செய்து வருகிறோம். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு சிலரால் பணவரவை அவர்கள் நினைத்த மாதிரி பெற முடியாமல் இருக்கும். இன்னும் ஒரு சிலரால் பணத்தை பிறரிடம் கொடுத்துவிட்டு அதனை வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி கொண்டிருப்பார்கள். இப்படி பணம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர்வதற்கு ஆனி மாதத்தில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

கிரகங்களின் ஆதிக்கம்
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். கிரகங்களின் ஆதிக்கத்தை பொறுத்து தான் அந்த மாதத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய பரிகாரங்கள் இருக்கும். அந்த வகையில் ஆனி மாதம் முழுவதும் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி பார்க்கலாம். இந்த பரிகாரம் நம்முடைய வாழ்க்கை மிகப்பெரிய பணவரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை காலை நிலை வாசல் கதவை திறக்கும் போது செய்ய வேண்டும். இதற்கு கருப்பு மிளகு மற்றும் சோம்பு இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் இந்த பொடியில் இருந்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு வீட்டில் நிலை வாசல் கதவை திறக்க வேண்டும் இந்த பொடியை நிலை வாசலுக்கு வெளியே ஊதிவிட வேண்டும்.
இந்த பரிகாரம் செய்யும்போது கூற வேண்டிய மந்திரம்
அந்த பொடியை ஊதி விடும்போது “குப்த தன தாராய நமஹ” இன்று மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த பொடியை நாம் தூவி விடுவதால் நம் வீட்டை தேடி பணவரவு வரும்.கொடுத்த இடத்திலிருந்து பணம் வரும். மற்றவர்களிடமிருந்து இனிமேல் பணத்தை வாங்கவே முடியாது என்று முடிவு கட்டிருந்தால் கூட இந்த பரிகாரத்தை செய்வதால் அந்த பணம் நம்மை தேடி வரும். முழு மனதோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : கடன் தீர்க்கும் தோரண கணபதி வழிபாடு!!


