எலிவலையானாலும் தனிவலை வேண்டும் என்று கூறுவார்கள். சொந்த வீடு இடம் இல்லாதவர்களுக்கு தான் அதோட கஷ்டம் என்ன என்று தெரியும். சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எண்ணத்தில் நிறைய பேர் இருப்பார்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். ஆனாலும் அந்த முயற்சிகள் வெற்றியடையாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருந்தால் சொந்தமாக வீடு வாங்குவதற்கு நிலம் வாங்குவதற்கோ பிரச்சினையாக அமையக்கூடிய சில விஷயங்களை தவிர்ப்பதற்கு முருகப்பெருமானையும் வராக மூர்த்திகையும் வழிபாடு செய்யலாம். இவர்களை எந்த முறையில் வழிபாடு செய்தால் வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் பகவான்
நிலம் வாங்குவதற்கு காரணமாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு உரிய அதிதேவதை முருகப்பெருமான் எனவே முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்வதால் நிலம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். அதேபோல் பாதாளத்தில் இருக்கக்கூடிய பூமியை காப்பாற்றி அதற்கு உரிய இடத்தில் கொண்டு வந்து வைத்தவராக தான் வராக மூர்த்தி திகழ்கிறார் அதனால் வராக மூர்த்தியை நாம் வழிபாடு செய்தாலும் நிலம் தொடர்பான வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். இவர்கள் இருவரையும் வழிபாடு செய்யும் முறைகளை பற்றி பார்க்கலாம்.
குரு பகவான்
வீடு வாங்குவதற்கு செவ்வாய் பகவானுடைய அருளோடு சேர்த்து குரு பகவானுடைய அருளும் பரிபூரணமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவானுக்கு அதி தேவதையான முருகப்பெருமான் குருவாக வீற்றிருக்கக்கூடிய ஸ்தலம் தான் திருச்செந்தூர். நம்மால் முடிந்த சமயத்தில் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது அங்கு இருக்கக்கூடிய குரு பகவானுக்கு மஞ்சுளா அர்ச்சனை செய்வது தாமரை பூ மாலை வாங்கி கொடுப்பது போன்றவற்றை செய்யலாம். இதனை செய்வதற்கு முன்பாக கடலில் நாம் நீராட வேண்டும். நீராடி முடித்துவிட்டு கடல் மண்ணை எடுத்து முருகப்பெருமானுடைய நாமத்தை கூறி அதனை ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து கட்டிக் கொள்ள வேண்டும். அந்த மண்ணோடு சென்று முருகப்பெருமானையும் குரு பகவானையும் வழிபாடு செய்து விட்டு வீட்டிற்கு வரவேண்டும் வீட்டிற்கு வந்ததும் எடுத்து வைத்துள்ள மண்ணோடு சேர்த்து ஒரு விரலி மஞ்சள் வைத்து செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
பெருமாள் வழிபாடு
செவ்வாய்க்கிழமை அன்று பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு சிறிய வாழையிலேயே விரித்து அதில் அரைத்த சந்தனத்தை வைக்க வேண்டும். பிறகு இட்லி பூவை எடுத்து அந்த சந்தனத்தில் தொட்டு பெருமாளுக்கு பொட்டு வைக்க வேண்டும். பிறகு அதே இட்லி பூவை எடுத்து சந்தனத்தை தொட்டு நம்முடைய நெற்றிலும் கைகளிலும் தடவி விட்டு பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி பானகத்தை நெய்வேதியம் ஆக வைத்து வழிபட வேண்டும். இப்படி செய்யும் போது பெருமாள் வராக மூர்த்தியாக மாறி நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றுவார். தங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவோ அதற்கு ஏற்றார் போல் வழிபாடு செய்யும் போது நம்முடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும்.
இதனையும் படியுங்கள் : சொந்த வீடு வாங்க குலதெய்வ வழிபாடு


