சோம்பலை போக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் வழிபாடு!

- Advertisement -

பொதுவாக ஒரு சிலர் நாளை நிறைவு செய்ய வேண்டும் என்று முந்தைய நாளே திட்டங்களை தீட்டி வைப்பார்கள் ஆனால் அடுத்த நாள் காலையில் அந்த வேலையை முடிப்பது நிறைய தடைகள் இருக்கும் அதற்கு காரணம் அவர்களுடைய சோம்பேறித்தனமாக கூட இருக்கலாம். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங்கியவர்கள் காலையில் எழுவதற்கு சிரமப்படுவார்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் ஒருவகையான சோம்பேறித்தனம் இருக்கும். இறுதியில் அனைத்து திட்டங்களையும் தள்ளிப்போட்டு சோம்பேறித்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுவார்கள் இது வீட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

-விளம்பரம்-

அம்பாள் வழிபாடு

பொதுவாக நம் வாழ்க்கையில் நமக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாம் சரணடைவது தெய்வத்தை தான் அந்த வகையில் வேலை பார்க்கும் போதும் சரி, அந்த வேலையை தூங்கும் போதும் சரி நமக்கு ஒரு சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பேறித்தனமாக இருந்தால் வாழ்க்கையில் ஒரு நல்ல உத்வேகம் கிடைக்க ராஜராஜேஸ்வரி அம்மனை வழிபடலாம். அம்பாளை வழிபட்டு வரும் போது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து சோம்பேறித்தனங்களும் தகர்த்தெறியப்படும். முழு மனதோடு அம்பாளுக்கு இந்த வழிபாட்டை செய்து பாருங்கள்.

- Advertisement -

சோம்பேறிதனத்தை போக்கும் வழிபாடு

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு பூச்சி அருகில் ராஜராஜேஸ்வரி அம்மனை நினைத்து குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்ற வேண்டும் சூரியன் உதயமாகும் போது நீங்கள் வெளியே சூரியனை பார்த்தவாறு கிழக்கு பக்கமாக நிற்க வேண்டும். சூரியனைப் பார்த்துக் கொண்டே ராஜராஜேஸ்வரி அம்மனின் மந்திரத்தை கூறினால் வாழ்க்கையில் சோம்பேறி தனமே இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கலாம். தினமும் நீங்கள் இதனை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் தினமும் உங்களால் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

மந்திரம்

ஓம் சங்கு ராங்கு சடாட்சர நமசியவ தேவி பிரணவ வாலை அகார உகார மகார ஸ்த்ரீ ஸ்ரீம் ஐம் மனோன்மணி ருத்திரா ருத்திரி சர்வ லோக தயாநிதி சர்வ ஜீவ வசிகரிசர்வ சகல வசி வசி ராஜ மோக வசி சர்வ லோக சர்வ புவன ராஜராஜேஸ்வரி வசி வசி

இந்த மந்திரத்தை தினமும் கிழக்கு நோக்கியவாறு சூரியன் உதிக்கும் போது ராஜராஜேஸ்வரி அம்மனை நினைத்து கூறி வந்தால் நீங்கள் வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்கலாம். அம்மனே உங்களுடைய கைப்பிடித்து வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவாள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் கூட நீங்கள் இந்த எளிமையான வழிபாட்டை செய்து வரலாம்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!