ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், பணியிடத்தில் தான் முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்புவது இயல்புதான். அனைவருக்குமே இப்படியான விருப்பமும் எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும். அதிலும் பதவி உயர்வுக்காக விழுந்து விழுந்து உழைக்கிறவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்குத் தகுதியான பாராட்டு கிடைக்காது. ஆனால் நம்மை விடக் கல்வியிலும் தகுதியிலும் அனுபவத்திலும் குறைந்தவர்கள் விரைவில் உயர்ந்த தரவரிசையை பெற்று விடுகின்றனர். இவரால் மட்டும் எப்படி உயர் பதவி பெற முடியும் என்ற எண்ணம் நிச்சயம் நமக்கு வரும். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தற்போதைய சூழல் அவர்களுக்கு சாதகமானதாக இல்லை என்றாலும், இந்த நிலை விரைவில் மாறும். திறமை இருந்தும் சரியான வேலையோ அல்லது பதவி உயர்வுகளோ கிடைக்காமல் இருப்பவர்கள் செய்ய வேண்டிய முருகர் வழிபாட்டை பற்றி இந்த ஆன்மீகம் பதிவில் பார்ப்போம்.

பதவி உயர்வு கிடைக்க முருகர் வழிபாடு
பொதுவாக வேலை தொடர்பான விஷயங்கள் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் செவ்வாய் பகவான். பதவி உயர்வு மற்றும் புதிய வேலை வேண்டும் என்பவர்கள் செவ்வாய் பகவானை வழிபட வேண்டும். கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். இவர் தான் செவ்வாய் பகவானின் அதிபதியான விளங்குகிறார். அந்த வகையில் முருக பெருமானை நாம் வழிபாடு செய்தால் முருக பெருமானின் அருள் மட்டுமல்லாமல் செவ்வாய் பகவானின் அருளால் வேலை தொடர்பான நம்முடைய அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். இதற்காக முருக பெருமானை எந்த முறையில் வழிபட்டால் வேலை தொடர்பான அனைத்து விஷயங்களும் நல்லவிதமாக நடக்கும் என்று பார்ப்போம்.
வழிபாட்டு முறை
இந்த வழிபாட்டை செய்வதற்கு மரிக்கொழுந்து மற்றும் செவ்வரளி இரண்டையும் மாலையாக கட்டி அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று முருக பெருமானுக்கு சாற்ற சொல்ல வேண்டும். பின் முருகப்பெருமானுக்கு ஆறு நெய் தீபங்களை ஏற்றி, தங்களுடைய பெயரில் அர்ச்சனை செய்து உங்களுடைய வேண்டுதல்களை மனதில் நினைத்து வழிபாடு வேண்டும். இந்த வழிபாட்டை வார வாரம் வரும் செவ்வாய்க்கிழமையன்று செவ்வாய் ஹோரையில் தொடர்ந்து 13 வாரங்கள் செய்ய வேண்டும். 13 வாரங்கள் நிறைவடைந்ததும் உங்களால் முடிந்ததை வீட்டிலேயே செய்து முருக பெருமானுக்கு நைவேத்தியமாக படைத்து, அங்கு உள்ளவர்களுக்கும் அளிக்க வேண்டும். கலியுக தெய்வமாக திகழக்கூடிய முருகப்பெருமானை முழுமனதுடன் நம்பி இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும்.
இதனையும் படியுங்கள் : நினைத்தது நடப்பதற்கு முருக பெருமான் சஷ்டி வழிபாடு!!


