- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- sri lanka
- Course
- Side Dish
புட்டு ஆப்பம் சாதம் இது எல்லாத்துக்குமே கடலை கறி வச்சு சாப்பிட்டிருப்பீங்க டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். அதே மாதிரி தனியா கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் கிரேவி கத்திரிக்காய் தொக்கு இதெல்லாம் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு சிலர் சுண்டல் குழம்பு, பட்டாணி குழம்பு, காராமணி குழம்பு இதெல்லாம் செய்யும் போது கூட கத்திரிக்காய் சேர்த்து வைப்பாங்க அப்படி வைக்கும் போது அந்த குழம்பு டேஸ்ட்டு ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இந்த மாதிரி எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா ஸ்ரீலங்கன் ஸ்பெஷலான யாழ்ப்பாணம் கத்திரிக்காய் கடலைக்கறி செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
இந்த கடலைக்கறி ரொம்பவே வித்தியாசமா இருக்கும் இதுல நம்ம கறிமசாலா, கரம் மசாலா, மிளகாய் தூள் எல்லாம் சேர்த்து செய்றப்போ வாசனை ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கும். ஒரு தடவை இந்த ரெசிப்பிய செஞ்சு பாத்துட்டீங்க அப்படின்னா கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிடும் சாதம் சப்பாத்தி இட்லி, தோசை இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த கடலைக்கறி ரெசிப்பிக்கு கத்திரிக்காயை நம்ம எண்ணெய்ல நல்லா வறுத்து சேர்க்கும் போது அவ்ளோ சூப்பரா இருக்கும். வெள்ளை கொண்டை கடலை நம்ப தினமும் கூட சாப்பிட்டா நம்ம உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும்.
புரோட்டின் சத்துக்கள் நிறைந்து காணப்படுது அதனால அடிக்கடி வெள்ளை சுண்டலும் சாப்பிடணும். இந்த கத்திரிக்காய் கடலை கறி ரெசிபி ரொம்ப வித்தியாசமானதாகவும் சாப்பிடறதுக்கு ரொம்ப ருசியானதாகவும் இருக்கும் வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட உங்களுக்கு பிடிச்ச யாராவது வந்தா கூட இந்த ரெசிபியை நீங்க செஞ்சு கொடுக்கலாம். டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா செஞ்சு பாருங்க கத்திரிக்காயையும் இந்த வெள்ளை கொண்டைக்கடலையும் வச்சு செய்ற ரெசிபி சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுற மாதிரி இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான சுவையான கத்திரிக்காய் கடலை கறி ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் இலங்கை தக்கடி இப்படி செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
சோம்பு வெந்தயம் சேர்த்து லேசாக வதக்கியதும் பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
கறி மசாலா தூள் மிளகாய் தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக மசிய வதக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கத்திரிக்காயை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கிரேவி தயாரானதும் அதில் ஊற வைத்து வேக வைத்த கொண்டை கடலையை சேர்த்து அதனுடன் வறுத்த கத்திரிக்காயை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
புளித்தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் அனைத்தையும் நன்றாக ஒரு சேர விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் கடலை கறி தயார்.






