சிக்கன் சுக்கா சாப்பிடும் அதே சுவைியல் சேனைக்கிழங்கு சுக்கா ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம், சேனை கிழங்கினை வைத்து சுக்கா ரெசிபியை காண உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான சுக்கா செய்யுங்கள். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும். ஒவ்வொரு நாளும் மதிய வேலை உணவிற்காக தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு பொரியல், குழம்பு செய்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அவ்வாறு சாம்பார் வைத்தால் அதிகப்படியாக காரமான பொரியல் வகைகளை தான் செய்கிறோம். அதேபோல் காரக்குழம்பு அல்லது குருமா குழம்பு செய்து விட்டால் குறைவான காரம் சேர்க்கும் பொரியல் வகையை சமைத்து வைக்கின்றோம். அவ்வாறு மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒரு அருமையான சேனைக்கிழங்கு சுக்கா செய்தால் மட்டும் போதும்.

-விளம்பரம்-

இதை செய்து விட்டால் எல்லா வகை குழம்புக்கும் ஏற்ற உணவாக இருக்கும். இதில் கால்சியம் சத்து உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கு வலுவை சேர்க்கும். இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். சேனையை நாம் அதிகமாக சாப்பிடுவதில்லை ஆனால் இதில் இருக்கும் ஈஸ்டோஜன் பெண்களுக்கு மிகவும் நல்லது அதனால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த சேனைக்கிழங்கு சுக்காவில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்க. கறியே வேண்டாம், இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள். சரி இந்த சுவையான சேனைக்கிழங்கு சுக்கா எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -
Print
2.34 from 3 votes

சேனை சுக்கா | Yam Sukka Recipe In Tamil

கிழங்கில் சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சர்க்கரை வல்லிக் கிழங்கு, மரவல்லிக் கிழங்கு என்று வகைகள் உள்ளன. ஒவ்வொரு கிழங்கும் ஒரு தனித்துவமான சுவையை தரும். அந்த வகையில் இன்று நாம், சேனை கிழங்கினை வைத்து சுக்கா ரெசிபியை காண உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ளோர் சேனைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் சேனைக்கிழங்கு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான சுக்கா செய்யுங்கள். இது சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிக்கு சூப்பராக இருக்கும். இந்த சேனைக்கிழங்கு சுக்காவில் பலவகையான மசாலாக்கள் சேர்த்து செய்வதால், இதன் சுவையோ கறி சுவைக்கு நிகராக இருக்கும். கறி செய்து சாப்பிட முடியாத நாட்களில் இந்த மாதிரி செய்து பாருங்க. கறியே வேண்டாம், இதனையே செய்து கொடுத்தால் போதும் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லுவார்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Yam Sukka
Yield: 4 People
Calories: 71kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 1/2 சேனைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 10 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சோம்புத்தூள்
  • 1 பட்டை, கிராம்பு
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சேனையை தோல் சீவி‌ உங்கள் விருப்பப்படி கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், மிளகு, சோம்பு தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் அதே வாணலியை அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • மசாலாவை நன்கு கொதித்ததும் வறுத்து வைத்துள்ள சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தண்ணீர் வற்றி மசாலா சேனைக்கிழங்கில் சேர்ந்ததும் நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான சேனை சுக்கா தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 71kcal | Carbohydrates: 6.4g | Protein: 3.5g | Fat: 0.2g | Sodium: 8mg | Potassium: 94mg | Fiber: 1.4g | Vitamin C: 31mg | Calcium: 12mg | Iron: 4.3mg

இதனையும் படியுங்கள் : மாலை நேர ஸ்நாக்ஸாக சேனைக்கிழங்கு பக்கோடா இப்படி ஒரு தரம் வீட்டிலயே செய்து பாருங்க!