ஏதாவது ஒரு மாதம் நமக்கு யோகத்தை தரக்கூடிய மாதமாக அமைந்து விடாதா என்று நாம் பலமுறை நினைத்திருப்போம் அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் இருந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கி ஐப்பசி மாதம் யோகமானதாக நமக்கு அமைய வேண்டும் என்றால் அதற்கு நாம் தெய்வத்தை வழிபட வேண்டும். ஐப்பசி மாதத்தில் ஒரு சில தெய்வங்களை நாம் வழிபட வேண்டும் அதோடு சேர்த்து குலதெய்வத்தையும் வழிபடும் போது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து யோகம் அமையும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடுவதன் மூலம் இந்த மாதம் நல்ல மாதமாக அமையும்.அந்த வகையில் ஐப்பசி மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய சில தெய்வங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானையும் வள்ளி தெய்வானையையும் வழிபட்டு வர ஐப்பசி மாதம் யோகமான மாதமாகவும் வசந்த மாதமாகவும் மாறும். வீட்டில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் அதிகரிக்கும்.
ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி தாயாரை வழிபடுவதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்த காரிய தடைகள் நீங்கி சுப காரியங்கள் வீட்டில் நடைபெறும்.
மிதுன ராசிக்காரர்கள் சனிக்கிழமை பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் அமையும்.
கடக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் துர்க்கை அம்மனை ராகு நேரத்தில் வழிபடுவதன் மூலம் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும் அதனை பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்.
சிம்மராசிக்காரர்கள் திங்கட்கிழமை அன்று கால பைரவரை வழிபட்டு வர வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் வெற்றிகரமான வாழ்க்கை உங்களுக்கு அமையும்.
துலாம் ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை அன்று மகாலட்சுமி தேவியை அதை வழிபடுவதன் மூலம் வியாபாரத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை என்று முருகப்பெருமானை வழிபாடு செய்து வர அவர்களை தேடி நல்ல செய்திகள் கிடைக்கும். இதைத் தொட்டாலும் வெற்றிகள் கிடைக்கும்.
தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபாடு செய்வதால் பணவரவு வீட்டில் அதிகரிக்கும்.
மகர ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் தொட்ட காரியங்கள் அனைத்தும் தோல்வி அடையாமல் வெற்றி கிடைக்கும்.
கும்ப ராசிக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் எதிர்பாராத நபர்களால் உதவி கிடைத்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.
மீன ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று விநாயகப் பெருமான் மற்றும் தக்ஷிணாமூர்த்திகை வழிபாடு செய்துவர சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
கோவிலுக்கு சென்று வழிபடுவதன் மூலம் மட்டுமே நல்லது நடக்கும் என்று கிடையாது வீட்டிலேயே நம்மால் முடிந்த அளவு முழு மனதோடு வழிபடலாம்.
இதனையும் படியுங்கள் : ஐப்பசி மாதத்தில் ஜாக்பாட் அடித்து பணம் கொட்ட போகும் 5 ராசிக்காரர்கள் இவர்கள் தான்! இதில் உங்கள் ராசியும் உள்ளதா?


