நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், வியாபாரம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அன்புக்கும் அழகுக்கும் காரணமான சுக்கிரனின் ராசி மாற்றம் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கப் போகிறது. அதன்படி சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு வரும் ஆகஸ்ட் 25ம் தேதி பெயர்ச்சி அடைகிறார். கன்னியை புதன் கிரகம் ஆட்சி செய்கிறது. மேலும் இந்த கன்னி ராசியில் சுக்கிரன் வலுவிழந்ததாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சுக்கிரன் கன்னியில் பெயர்ச்சி அடைவது தரித்திர என்ற யோகத்தை உருவாக்கும். ஜோதிடத்தின் பார்வையில் இந்த யோகம் மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. எனவே இந்த யோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

கன்னியில் சுக்கிரனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமாக இருக்கும். உத்தியோகத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். நிதி சிக்கல் ஏற்படும். எந்த காரியத்தை தொடங்கினாலும் அதிக முறை சிந்தித்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்து கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களோடு அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்வது நல்லது. குடும்பத்தினரால் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் ராசி மாற்றம் கஷ்டங்களை தரும். நிதி வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது எனவே கவனமாக இருங்கள். குடும்பத்தின் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடலாம்.
மகரம்

கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தராது. நிதி நிலையில் ஏமாற்றம் ஏற்படும். சிக்கல்கள் எப்போதும் உங்களைத் தேடி வரும். சூழ்நிலை அமைந்துள்ளது. வீண் பழிகள் நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உருவாகும் புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி இழப்பீடு ஏற்படலாம்.
இதனையும் படியுங்கள் : சுக்கிரனால் இனி இந்த ராசிகளுக்கு பொன்னான நேரம் தொடங்கும்! பண மழை கொட்டும்!!


