2026 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரப்போகிற புது ஆண்டில் தங்களின் வாழ்க்கை எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைத்து ராசிக்காரர்களிடம் இருக்கும். 2026ஆம் ஆண்டு பல கிரகங்களின் பெயர்ச்சியும் நடைபெற உள்ளது. இதனால், சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலையும், சில ராசிகளுக்கு எதிர்மறையான ஆற்றலையும் கொடுக்கும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டில், கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கம் ஒருவரின் தொழில், நிதிநிலை மற்றும் உறவுகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களின் உடல்நலம் மற்றும் மனநிலையையும் ஆழமாகப் பாதிக்கும். மேலும், குடும்பத்திலும் சில பிரச்னைகள் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. எனவே, 2026ஆம் ஆண்டு எந்தெந்த ராசிகளுக்கு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் 2026ஆம் ஆண்டு உடல் நலனில் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் உங்கள் உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். சிலர் எலும்புகள், நரம்புகள் மற்றும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திப்பீர்கள் என கூறப்பட்டுள்ளது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்க உணவுகளிலும், பழக்கவழக்கங்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு 2026ஆம் ஆண்டு ஏற்ற இறக்கமாகவே இருக்கும். உடல் நலனை பொறுத்தவரையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படலாம். ஏற்கனவே இருந்து வந்த உடல் நல பிரச்னைகள் தீரும். இருப்பினும், வெளியூர் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். சிக்கல்கள் உங்களைத் தேடி வரும் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நீங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், பெரிய உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் 2026ஆம் ஆண்டு பெரிய உடல் நிலப் பிரச்னைகள் சந்திப்பீர்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கு சனி தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், நரம்பு சார்ந்த பிரச்னைகள், வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். ஏற்கனவே தலைவலி, முதுகுவலி,இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமான மருத்துவ செலவுகள் அதிகம் ஏற்படும். கடன் தொல்லைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மொத்தத்தில் இந்த ஆண்டு மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ஆண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல் நலத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. இருப்பினும், 2026ஆம் ஆண்டு கடைசியில் சிறிய பிரச்னைகள் ஏற்படலாம். ஆரோக்கியப் பிரச்சினைகளை புறக்கணிப்பது உங்கள் நிலையை மோசமாக்கக்கூடும். இதனால், உங்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றினால், பெரிய உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும், வீட்டில் நடக்கும் சில பிரச்னைகளால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்

2026ஆம் ஆண்டு எதிர்பாராத உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படலாம். முழங்கால் அல்லது கால் தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சிறு காயம் ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது. வெளியூர் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். பணவரவுகளில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது அதற்கு ஏற்றார் போல் சேமித்து வைத்துக் கொள்வது நல்லது. புதிய முதலீடுகள் சிக்கலை ஏற்படுத்தும் எனவே அதை தவிர்ப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இதனையும் படியுங்கள் : 2026ம் ஆண்டு பெயர்ச்சியாகும் சூரிய பகவானால் இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் தான்!!


