ஜோதிடத்தில் குரு பகவான் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவர் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் அமோகமாக வந்து விடுவார்கள். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குருவின் நட்சத்திர பெயர்ச்சி ஒவ்வொரு நபரின் ஜாதகத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் செப்டம்பர் 19, 2025 அன்று, பிற்பகல் 2:01 மணிக்கு, குரு மிதுன ராசியில் தங்கி புனர்பூசம் நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைவார். புனர்பூசம் நட்சத்திரம் என்பது குருவின் சொந்த நட்சத்திரமாகும். இந்த நட்சத்திர பெயர்ச்சி எந்த ராசிகளுக்கு நன்மை பயக்கும் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு, குருவின் இந்தப் பெயர்ச்சி நம்பிக்கை, ஆரோக்கியம் மேம்படும். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய திட்டங்களில் வெற்றி போன்ற புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் ஆளுமையை அதிகரிக்கும். உங்கள் அறிவுசார் மற்றும் படைப்பு திறன்களை அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். காதல் உறவுகள் இனிமையாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். முதலீட்டிலிருந்து நல்ல வருமானம் கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்

துலாம் ராசிக்கு குருவின் இந்தப் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரும். வெளிநாட்டுப் பயணம், உயர் கல்வி அல்லது மதப் பணிகளில் வெற்றி பெறுவதற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும். தொழிலில் புதிய திசை திறக்கும். நிதி நிலை மேம்படும். பெரிய இலக்கை நோக்கிச் செல்வேர்கள். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய திட்டங்களில் வெற்றி போன்ற புதிய வாய்ப்புகள் திறக்கப்படும். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். ஆன்மீக நடவடிக்கைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு அதிகமாகும்.
தனுசு

தனுசு ராசிக்கு, செல்வாக்கு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். சட்ட விஷயங்கள் வெற்றிகரமாக இருக்கும். படைப்புத் திறன்களை மேம்படுத்தும், சிறந்த உறவை உருவாக்க உதவும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நல்லிணக்கமும் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்கு கல்வி, காதல் மற்றும் படைப்பாற்றல் வேலைகளில் முன்னேற்றம் கிடைக்கும். இந்தப் பெயர்ச்சி திருமண பாக்கியத்தை தரும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். காதல் உறவுகள் இனிமையாக மாறும். உங்கள் புதிய யோசனைகளைச் செயல்படுத்த உதவும். முதலீடுகளிலிருந்து லாபம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். நீண்டகால பிரச்சினைகள் தீர்க்கப்படும். வணிகத்தில் விரிவாக்கம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
இதனையும் படியுங்கள் : குரு பகவானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்கள் இவர்கள் தான்!!


