ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கங்களும், இணைப்புகளும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும். பிப்ரவரி மாதத்தில் சூரியன் தனது எதிரி கிரகமான சனியின் ராசிக்குள் நுழைவதால், அது சிறப்பு வாய்ந்தது. பிப்ரவரி 13, 2026 அன்று, சூரியன் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடைவார், மார்ச் 15 அன்று, கும்ப ராசியிலிருந்து வெளியேறி மீன ராசிக்குள் நுழைவார். இந்த காலகட்டத்தில், சூரியன் நான்கு ராசிக்காரர்களுக்கும் ஒரு மாதத்திற்கு சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்கி, அவர்களுக்கு ஏராளமான செல்வத்தையும் வெற்றியையும் தருவார். சூரியனும் சனியும் எதிரி கிரகங்கள் ஆகும் என்பதால், சனியின் ராசியான கும்ப ராசிக்குள் சூரியன் நுழைவது 12 ராசிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் அதீத நன்மைகளை பெற போகிறார்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மேஷம்

மேஷ ராசிக்கு சூரியனின் இந்தப் பெயர்ச்சி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய வருமான வழிகள் திறக்கும், மூத்த குடிமக்கள் ஆதரவளிப்பார்கள். முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலம் நீங்கள் திட்டமிட்டு கொண்டிருந்த பணிகள் நிறைவேறும். முக்கிய பொறுப்புகளை இந்த காலகட்டத்தில் பெறுவீர்கள். உங்கள் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை நேரத்தை அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும்.
ரிஷபம்

இந்த நேரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டுவரும். பதவி உயர்வு சாத்தியமாகும். உங்களுக்கு பணம் கிடைக்கும், இது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்து வழக்கு அல்லது வேலை ஒரு நல்ல முடிவை பெறக்கூடிய காலமாகும். குடும்பத்தில் மன மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில், பெரும் வெற்றி கிடைக்கும். உங்கள் கடின முயற்சி மேலதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும்.
மிதுனம்

இந்த மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். விஷயங்கள் முன்னேறும். முதலீடுகள் லாபத்தைத் தரும். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். தொழில் ரீதியாக உங்களை நம்பி மிகப்பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். திருமணமானவர்களுக்கு இது ஒரு சிறந்த காலகட்டமாக இருக்கும். மாணவர்கள் உயர்கல்விக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.
தனுசு

தனுசு ராசிக்கு சூரியனின் பெயர்ச்சி நன்மைகளைத் தரும். நீண்ட காலமாகத் தடைப்பட்ட பணிகள் நிறைவேறத் தொடங்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடந்த கால முயற்சிகள் பலனளிக்கும். நன்மை பயக்கும் தொடர்புகள் ஏற்படும். பொருளாதாரத்தில் திடீர் ஏற்றம் கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வதற்கு ஒரு உகந்த கால கட்டமாகும். வாழ்க்கை துணையுடன் இருந்த கசப்புகள் விலகும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு பணிகளை வெற்றிகரமாகச் செய்வதில் வெற்றி பெறுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2026ல் சனியின் பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு யோகம் தான்!!


