ஜோதிட சாஸ்திரப்படி, கல்வி, வியாபாரம் மற்றும் தகவல் தொடர்புக்கு அதிபதியாக விளங்குபவர் புதன் பகவான். தனி ஒரு நபரின் ஜாதகத்தில் அறிவாற்றல், புத்திக்கூர்மை, பேச்சாற்றால், படைப்பாற்றல் மற்றும் பல திறமைகளை பிரதிபலிக்கும் ஒரு கிரகமாக புதன் பார்க்கப்படுகிறார். அந்த வகையில் புதன் கிரகத்தின் ஒவ்வொரு அசைவும் வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏப்ரல் 11 அன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். ஏற்கனவே கடந்த மார்ச் 21ம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்த புதன், தற்போது ஏப்ரல் 11ல் மீன ராசிக்கு செல்வதால் 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும் பணவரவும் கிடைக்கப் போகிறது. யார் இந்த நான்கு ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இழுபறியில் இருந்த அல்லது மற்றவர்களிடம் சிக்கியிருந்த பணம் தற்போது தடையில்லாமல் வந்து சேரும்; பணியிடத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைத்து வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் உதவியால் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடக்கூடும். தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் ஊதிய உயர்வு என பல்வேறு வழிகளில் வெற்றி கிட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்கள் செய்ய நினைத்து தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் வெற்றிகரமாக முடிவடையும்; வெளிநாடு சென்று கல்வி பயில நினைப்பவர்களுக்கு இது மிகவும் சாதகமான காலகட்டமாக அமையும். வீட்டில் நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்களும், ஆதாயங்களும் ஏற்படும்.
கும்பம்

கும்ப ராசியினருக்கு புதன் பெயர்ச்சியின் காரணமாக திடீர் பணவரவு கிடைப்பதோடு, குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி நிம்மதி பிறக்கும்; தொழிலில் எதிர்பாராத பெரும் லாபமும், புதிய வாய்ப்புகளும் தேடி வரும். மேலதிகாரிகளுடனான உறவு மிகவும் சிறப்பாக மாறும். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய லாபத்தை எதிர்பார்க்கலாம். மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் உங்களின் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் தோன்றும். தொழில் வாழ்க்கையில் எதிரிகளை வீழ்த்தி பெரிய வெற்றிகளைக் குவிக்கலாம்.
மீனம்

புதன் நேரடியாக மீன ராசிக்குள் நுழைவதால், இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை பலமடங்கு உயரும்; அலுவலகத்தில் சம்பள உயர்வு மற்றும் புதிய பதவிகள் கிடைப்பதுடன், வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும். வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சரியான உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கு இது சரியான நேரமாக இருக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு உயர்வீர்கள்.
இதனையும் படியுங்கள் : மகாலட்சுமி ராஜயோகம் 2026


