ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். புதன் மிதுனம் மற்றும் கன்னியை ஆளும் கிரகமாக கருதப்படுகிறது. அந்த வகையில் கிரகங்களின் இளவரசராக உள்ள புதன் ஜனவரி 7, 2026 அன்று புதன் பூராடம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நேரத்தில், தடைபட்ட வேலைகள் நிறைவடையும், புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும், மேலும் சில ராசிக்காரர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தில் சில மாற்றங்களை சந்திக்க நேரிடும். யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கன்னி

கன்னி ராசிக்கு இந்தப் பெயர்ச்சி நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். நீண்டகால பிரச்சினைகல் முடிவுக்கு வரும். வருமானத்தில் திடீர் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது, இது உங்கள் நிதி நிலைமையை வலுப்படுத்தும். புதிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வேலை கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதனின் இந்தப் பெயர்ச்சி பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக மாணவர்கள் இந்த நேரத்தை மிகவும் சாதகமாகக் காண்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நிறைவடையத் தொடங்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு, 2026 ஆம் ஆண்டு சிறப்பு நன்மைகளைத் தரும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். நிதி நிலைமை மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மன உறுதி அதிகரிக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இக்காலத்தில் எடுக்கும் சில முக்கிய முடிவுகள் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இக்காலத்தில் பணத்தை முதலீடு செய்வது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
இதனையும் படியுங்கள் : 2026ல் மூன்று முறை இடம் மாறும் குரு பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் தான்!!


