ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மேலும் கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் புதன் அக்டோபர் 24, 2025 அன்று விருச்சிக ராசிக்குள் நுழைவார். இந்தப் பெயர்ச்சி பல ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் மிக அதிக நன்மைகள் கிடைக்கும். புதன் பெயர்ச்சியால் பொற்காலத்தை அனுபவிக்க போகும் ராசிகள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
கன்னி

விருச்சிக ராசியில் புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளை அளிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வாகனங்கள் வாங்கவும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி அதிகமாகவே இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
விருச்சிகம்

புதன் பெயர்ச்சி விருச்சிக ராசியில் அதிக நன்மைகளை அளிக்கும். சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். இந்த அம்சம் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வருமானம் பெருகும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைகள் அல்லது போட்டித் தேர்வுகளில் வெற்றிக் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி பன்மடங்கு லாபத்தை அதிகரிக்கும். இது உங்கள் நிதி நிலைமையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் ஈட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன. நிதி முடிவுகளை மிகவும் திறம்பட எடுக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வாழ்வில் ஆக்கப்பூர்வமான நன்மைகள் நடக்கும். தொழில் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்கள் வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்கும்.
மகரம்

புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும். சமூக உறவுகளில் நேர்மறையான தாக்கம் ஏற்படும். இது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிற்கும் நன்மை பயக்கும். குறுகிய கால பயணங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் நண்பர்கள் உங்களை ஆதரிப்பார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
கும்பம்

புதன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு பல வித லாபத்தை அளிக்கும். இது உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். பொருளாதார நிலை மேம்படும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. பொறுமையாக இருந்தால், நீங்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பால் வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலைச் செய்ய வாய்ப்பு வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்

புதன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு சாதமானதாக இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் நல்லபடி அமையும். உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய உற்சாகம் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதல் அதிகரிக்கும். வணிகம் மற்றும் கல்வி முயற்சிகளில் நீங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தை அனுபவிப்பீர்கள். எதிரிகள் உங்களிடமிருந்து விலகி இருப்பார்கள். குடும்பத்தில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சி கிடைக்கும். வியாபாரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!


