நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். சனிபகவான், நியாயம் மற்றும் கர்மத்தின் கடவுளாக கருதப்படுகிறார். சனி பகவானின் அருள் வேண்டி வழிபாடு செய்வது வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும் என்று நம்பப்படுகிறது. பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். ஆனால் சனி பகவான் கஷ்டத்தை மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளையும் வழங்கக் கூடியவர். நாம் செய்துள்ள நன்மை-தீமைகளின் அடிப்படையிலேயே சனி பகவான் நமக்கு தரும் பலன்களும் அமையும். அந்த வகையில் சனி பகவான் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. ஜூலை 13 அன்று, சனி பகவான் மீனத்தில் வக்கிர பெயர்ச்சி அடைந்துள்ளார். இது இந்த மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும், எனினும் சில ராசிகளில் இதனால் நற்பலன்கள் ஏற்படும். யார் அந்த அதிர்ஷ்ட ராசிபலன்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் காணலாம்.
மிதுனம்

சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.வியாபாரத்தில் முன்னேற்றம் மற்றும் பண ஆதாயங்களுக்கு வலுவான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். கணவன் – மனைவி இடையே மகிழ்ச்சி பெருகும். நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வெளிநாட்டுப் பயணம் நன்கு பயக்கும்.
கடகம்

சனி வக்ர பெயர்ச்சியால் உருவாகும் விபரீத ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். திடீர் பண ஆதாயங்கள் உருவாகலாம். நிதி நிலைமை மேம்படும். உறவுகள் மேம்படும். கூட்டாண்மையில் செய்யப்படும் தொழிலில் லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். நிதி சார்ந்த விவகாரத்தில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும். பயணம் நன்மை பயக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும்.
விருச்சிகம்

சனி வக்ர பெயர்ச்சியால் உருவான ராஜயோகங்களின் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறுவார்கள். சகோதர சகோதரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும். குடும்ப உறவுக்குள் மகிழ்ச்சி நிலவும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதர்வு கிடைக்கும். சமூக சேவையில் ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் செல்வாக்கு மிக்கவர்களை சந்திக்க நேரிடும். வணிகத்தில் நல்ல லாபம் ஈட்டுவதற்கு கை கொடுக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு திருமணம் நிச்சயம் ஆகலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
தனுசு

சனியின் கேந்திர திரிகோணம் ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். சொத்து, வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் அமைதி நிலவும். சனி தசையின் எதிர்மறை விளைவுகளும் குறையும். உழைப்புக்கு முழுமையான பலன் கிடைக்கும். குழந்தைகள் வழியே நல்ல செய்திகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். உத்தியோகத்தில் அனுகூலம் உண்டாகும். பணியிடத்தில் பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் நிறைவேறும். துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
மகரம்

சனி வக்ர பெயர்ச்சியால் ஏற்படும் விபரீத ராஜயோகமும் கேந்திர யோகமும் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும். நீண்ட காலமாகத் தடைப்பட்டிருந்த பணிகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண வரவு அதிகரிப்பதோடு, புதிய வருமான வாய்ப்புகளும் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நிதி நிலைமை முன்பு இருந்ததை விட நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லலாம்.
இதனையும் படியுங்கள் : சனி பெயர்ச்சி 2025ல் சனியின் அருள் பார்வையை பெற போகும் ராசிக்காரர்கள்!!


