ஜோதிடத்தில் நவகிரகங்களுக்கிடையேயான உறவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் சூரியன் தந்தை என்றும், மகன் சனி என்றும் கூறப்படுகிறது. இந்த இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. சூரியன் ஒளியை வழங்கும் கிரகம். சனி இருளை வழங்கும் கிரகம். இதில் இருந்தே இவ்விரு கிரகங்களின் தன்மை முரண்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். 2024 நவம்பர் மாதம், கிரகங்களின் இயக்கம், விசேஷ யோகம், இணைவு ஆகியவை நிகழும் சிறப்பு மாதமாகும். இம்மாதத்தில் சூரியனும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் நவபஞ்சம யோகம் உண்டாகும். நவம்பர் 2024இல் சூரியனும் சனியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதால் நவபஞ்சம யோகத்தை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்க போகிறது. யார் அந்த 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சூரியன் மற்றும் சனியின் ஒன்பதாம் பார்வையால், மேஷ ராசிக்காரர்கள் அதிக நம்பிக்கையுடனும் தீர்க்கமானவர்களாகவும் இருப்பார்கள். உங்கள் பணித்திறன் அதிகரிக்கும் மற்றும் சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த நன்மையைக் கொடுக்கும். வியாபாரம் சிறக்கும். வேலை விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டாகும். வழக்குகளில் நல்ல திருப்பம் ஏற்படும். கேட்டுருந்த கடன் தொகை கிடைக்கும்.
சிம்மம்

நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைத்து வெற்றி பெறுவார்கள். சுற்றுலா சென்றுவர யோகம் ஏற்படும். ஆன்மிகப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உங்களின் தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல இடமாற்றம் கிடைக்கும். உங்களின் சமூக மதிப்பு உயரும். பங்குச்சந்தை முதலீடுகள் நன்றாக இருக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். இந்த மாதத்தில் சுக்கிரன் வீடு வாகனம் மாற்றுவது, சுபகாரியங்கள் குறித்துப் பேசுவது ஆகியவற்றைச் செய்யலாம்.
விருச்சிகம்

சூரியன்-சனியின் அம்சம், உங்களை மிகவும் தீவிரமாகவும் பொறுப்பாகவும் மாற்றும். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். பணித்திறன் அதிகரிக்கும் மற்றும் உங்கள் தொழிலில் புதிய உயரங்களை அடைய முடியும். இதுவரை தடைப்பட்டிருந்த வேலைகள் நிறைவேறும். பாக்கியத்தில் சூரியன் சனி சேர்க்கை நிகழும் இந்தக் காலத்தில் வண்டி வாகனம் வாங்கலாம். தாயார் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வேலை மாற்றம், தொழில் மாற்றம் வெற்றியடையும். வெளிநாடு செல்லும் யோகம் வாய்க்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் இந்த மாதம் மிகவும் ஒழுக்கத்துடனும் கடின உழைப்புடனும் இருப்பார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உங்கள் பணி பாராட்டப்படும். உங்கள் சொந்த வேலையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இந்தக் காலகட்டம் வழிபாடுகள் செய்ய உகந்த நாள்கள். புதிய வேலை மாற்றம், புதிய வாய்ப்புகள் தேடிக்கொண்டிருப்பவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கினால் பலன் உண்டு.
கும்பம்

சூரியன் மற்றும் சனியின் பார்வை, கும்ப ராசிக்காரர்களை மிகவும் தீவிரமான மற்றும் பொறுப்பானவர்களாக மாற்றும். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அலை வீசும். வழக்கு விசாரணைகள் சாதகமாக அமையும். முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். அரசு சம்பந்தமான வேலைகளில் மிகுந்த நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரம் நன்றாக இருக்கும். முதலீடுகளுக்கு எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு புஷ்ப யோகத்தால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் சில ராசிகள்!


