வானில் பல அரிய நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்வதுண்டு. அதுவும் விண்வெளியில் உள்ள கிரகங்களுள் ஒருசில ஒரே நேர்கோட்டில் அவ்வப்போது வந்து வானியல் நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அந்த வகையில் பிப்ரவரி 2026-ன் கடைசி வாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் 6 முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன. குரு மிதுன ராசியிலும், சனி மீன ராசியிலும், கும்ப ராசியில் ராகு, புதன் மற்றும் சுக்கிரனுடன் இருக்கிறார். இந்த கிரக சேர்க்கை பல ராசிகளுக்கு சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் கன்னி ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிலுவையில் உள்ள திட்டங்கள் முடிவுக்கு வரும். வேலையில் பதவி உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கும். உறவுகள் மேம்படும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் பெருகும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் இருந்த சண்டைகள் மறைந்து ஒற்றுமை பிறக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
தனுசு

பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் தனுசு ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு தங்களின் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாழ்க்கையில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் ஏற்படும். தடைபட்ட பணிகள் விரைவாக முடியும். வருமானம் அதிகரிக்கும். வேலை, தனிப்பட்ட வாழ்வில் சமநிலை நல்ல பலனைத் தரும். ஆரோக்கியம் சிறப்பாக மாறும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
மீனம்

பிப்ரவரி இறுதியில் ஒரே நேர்கோட்டில் வரும் 6 கிரகங்களால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நன்றாக இருக்கும். அதிர்ஷ்டம் உங்கள் கதவுகளைத் தட்டும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் புதிய கூட்டாண்மைகள் ஏற்படும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும். கடந்த சில மாதங்களாக இருந்த குழப்பங்கள் நீங்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். பணம் தொடர்பான விஷயங்கள் நிம்மதியைத் தரும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு வேகமாக உயரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
இதனையும் படியுங்கள் : 2026 கஜகேசரி யோகம் பலன்


