- Advertisement -
Home ஆன்மிகம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்...

120 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் உருவாகும் திரிகிரக யோகம் இனி இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்!!

- Advertisement -

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில யோகங்கள் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகி, இன்னும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், சனி மற்றும் செல்வத்தின் காரணியாக பார்க்கப்படும் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கை மீன ராசியில் நடக்கிறது. இதனால் மார்ச் மாதத்தில் மீன ராசியில் சூரியன், சுக்கிரன், சனி ஆகியோரின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது சுமார் 120 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிகளில் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிகமான பலன்களை பெற இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்கும் நிலை உருவாகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் நிலவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலை செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

சிம்மம் 

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்து வெற்றி பெறும். வணிகத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணத்தை சேமிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு வரலாம். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். 

மகரம் 

மகர ராசியின் 3 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். இது அவர்களுக்கு நிதி ரீதியாக கைகொடுக்க உள்ளது. வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் உறவு மேம்படலாம். எடுக்கும் அனைத்து முடிவுகளிலும் வெற்றியும், வாழ்க்கை சிறப்பாகவும் அமையும்.

கும்பம் 

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த காலகட்டத்தில் தொடங்கலாம். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சனை இருந்தால், இந்த காலகட்டத்தில் சரியாகும். வெளியில் சிக்கி இருக்கும் பணம் கைக்கு வரும். பதவி மற்றும் சம்பள உயர்வும் கிடைக்கும். 

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி பலன்கள் 2026