ஜோதிடத்தில் சுக்கிரன் செல்வம், காதல், கலை, சுகபோகம் மற்றும் வசதியின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் ராசியை அல்லது நட்சத்திரத்தை மாறும் போது அதன் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். அந்த வகையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது பிப்ரவரி 11ஆம் தேதி நிகழ உள்ளது. அதாவது சதயம் நட்சத்திரத்திற்கு மாற உள்ளார். இது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், மூன்று ராசிகள் மட்டும் அதிக பலன்களை பெற இருக்கின்றனர். யார் அந்த அதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு மாற உள்ளதால், ரிஷப ராசிக்காரர்கள் சாதகமான காலத்தை பெற இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். நண்பர்கள் மூலம் லாபம் உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும்.
மிதுனம்

சுக்கிரன் சதயம் நட்சத்திரத்திற்கு மாறுவது மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றியை கொடுக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் கையில் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தொழிலில் நல்ல லாபம் பெறலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு சாதகமான நேரமாக இருக்கும். புதிய வாகனங்கள் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் அல்லது எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம்.
துலாம்

சுக்கிரன் சதம் நட்சத்திரத்திற்கு மாறுவது, துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். திருமணம் அல்லது உறவுகள் இனிமையாக மாறும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
இதனையும் படியுங்கள் : புதனின் மாற்றத்தால் 2026ல் பண மழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள் தான்!!


