ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், மகிழ்ச்சி, ஆடம்பரம் மற்றும் செழிப்பு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் தலைவராக பார்க்கப்படும் சுக்கிரன் மாதத்திற்கு ஒரு ராசி என மாறும் பழக்கம் கொண்டவர். இவர் சாஸ்த்திரங்களின் கூறப்பட்டது போன்று குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பயணம் செய்வார். இவரின் பயணம் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும். அந்த வகையில் சுக்கிர பகவான் தற்போது தனுசு ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். ஜனவரி 13 ஆம் தேதி அவர் மகர ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடையும் போது எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற போகிறார்கள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்

மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். மக்கள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். பணம் குவியும். திருமண வாழ்க்கையில் அன்பும் சமநிலையும் நிலவும். பணியிடத்தில் இருந்த மன அழுத்தம் நீங்கி, புதிய தெளிவு பிறக்கும். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தந்தையிடமிருந்து எதிர்பார்த்த சொத்துக்கள் அல்லது உதவிகள் கிடைக்கும். தடைபட்டு நின்ற சுப காரியங்கள் மீண்டும் வேகமெடுக்கும். வேலை பார்த்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகளும், புகழும் தேடி வரும்.
கன்னி

மகரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி அடைவது கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. குறைந்த ஊதியத்தில் அதிருப்தியில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். குடும்பத்தினரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்து உங்களுக்கு நன்மை கிடைக்கும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது வெளிநாட்டு பயணங்களுக்கான வாய்ப்புகள் வருவாகும். காதல் கனிந்து திருமணத்தை நோக்கி நகரும். திருமண வாழ்க்கையில் அன்பும், நல்லிணக்கமும் நிலவும். தொழிலில் லாபம் உண்டாகும்.
துலாம்

சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவது துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். உங்கள் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். உங்கள் வேலை மற்றும் வணிகத்தில் நீங்கள் முன்னேறலாம். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். நிலுவையில் இருந்த பணப்பலன்கள் கைக்கு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். காதல் உறவில் இருப்பவர்களுக்கு காதல் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் உண்டாகும். இழுபறியில் இருந்த வேலைகள் முடிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
இதனையும் படியுங்கள் : 2026 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்


