- Advertisement -
Home ஆன்மிகம் குரு சந்திரன் சேர்வதால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்!!

குரு சந்திரன் சேர்வதால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டும்!!

- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்களின் இடமாற்றம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது சில சமயங்களில் சில நேரங்களில் ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் அப்போது சக்தி வாய்ந்த யோகங்கள் உருவாகும். அந்த வகையில் வேத ஜோதிடத்தில் கஜ கேசரி யோகம் எனப்படுவது குறிப்பிட்ட ஒரு ராசியில் குருவும், சந்திரனும் ஒன்றாக இருப்பதை குறிக்கிறது. ஜோதிட முறைகளில் பலம் மிக்க ஒரு யோகமாக கருதப்படும் இந்த கஜ கேசரி யோகம். அந்த வகையில் செப்டம்பர் 8, 2025 திங்கட்கிழமை தினமான இன்று சந்திரனும் குருவும் இணைந்து மங்களகரமான கஜகேசரி யோகத்தை உண்டாக்கி சிவனின் அருளை கொண்டு வருகிறார். இதனிடையே பூரட்டாதி நட்சத்திரத்தின் சேர்க்கையால் லட்சுமி யோகமும் உண்டாகி, மங்களகரமான காரியங்களுக்கான வழிகளை உண்டாக்குகிறது. இதன் தாக்கம், அனைத்து ராசி உடைவர்களின் வாழ்விலும் இருக்கும். இதில், சில ராசிகளுக்கு வேலையிலும், தொழிலிலும் முன்னேற்றம் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷம் 

மேஷ ராசியினருக்கு தொழில் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வரும் ஒரு தினமாக இன்று இருக்கும். குறிப்பாக, தங்கள் தனித்திறமையால் தனித்து நிற்பதோடு, தனது கருத்துக்களுக்கான அங்கீகாரம், தனியுரிமையை பெறுவார்கள். சிலருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனை நீங்கும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும், நிதி நிலை மேம்படும். வாழ்க்கை சிறப்பாக மாறும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழில் விவகாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியில் முடியும். திருமணத்திற்கு வரன் பார்த்து கொண்டிருப்பவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கலாம். கடன் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு புதிய வழி பிறக்கும். 

- Advertisement -

மிதுனம் 

மிதுன ராசியினருக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு தினமாக இன்று அமையும். தங்களின் தனிப்பட்ட ஆர்வத்தில் கவனம் செலுத்துவார்கள், தங்கள் லட்சிய பாதையில் வெற்றியை குவிப்பார்கள். கல்வி துறையில் இருக்கும் நபர்களுக்கு சிறப்பான ஒரு காலமாக இன்று அமையும். உங்கள் முயற்சிக்கு குடும்பத்தினர் முழு ஆதரவு அளிப்பார்கள். முன்னதாக செய்து வைத்த முதலீடுகளில் போதுமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கலாம். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கடன் வாங்கியிருந்தால் அதை  திருப்பி அடைத்து விடுவீர்கள். 

சிம்மம் 

ஆளுமை மிக்க சிம்ம ராசியினருக்கு பெயரும் – புகழும் கிடைக்கும் ஒரு தினமாக இன்று அமையும். குறிப்பாக, அரசியலில் இருக்கும் நபர்கள் அதிகாரம் மிக்க இடத்தில் அமரும் வாய்ப்பு கிடைக்கும். தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னை சார்ந்து உள்ளவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்துவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு நல்ல இடத்தில் அதிக ஊதியத்துடன் வேலை கிடைக்கும். தனிப்பட்ட முயற்சிகள் வெற்றியை தேடி தரும். மாணவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதற்கான வழியை காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் பெறுவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம் 

துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் சுறுசுறுப்பான ஒரு தினம். ஆற்றல் மிக்க ஒரு தினமாக இன்று இருக்கும் உங்கள் ஆற்றலை பயன்படுத்தி, தொழில் வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதிக்கும் ஒரு தினமாகவும் இன்று அமையும். வணிகத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். குழந்தைகள் வழியே நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்கள் கல்வி மேம்படும், உயர்கல்வி வாய்ப்பு பெறுவார்கள். தொழில் வாழ்க்கை இனிமையாக அமையும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உழைப்பு மதிக்கப்படும். கடின உழைப்பின் பலனாக பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். 

மீனம் 

சந்திரன் இன்று மீன ராசிக்கு குடியேறும் நிலையில், மீன ராசியினரின் பொருளாதார நிலை இன்று சிறப்பாக அமையும். முன்னர் செய்து முடித்த வேலைகளுக்கு இன்று பலன் கிடைக்கும். வருமானம் பெருகும், நிலுவையில் இருந்த பணம் விரைவில் கிடைக்கும். படித்து முடித்து பணிக்காக காத்திருந்த நபர்களுக்கும் இன்று எதிர்பார்த்த பணி கிடைக்கும். புதிய பணியில் சேரலாம் அல்லது புது இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் நேரம் அதிகம் செலவிட ஆர்வம் காட்டுவீர்கள். நாள்பட்ட நோய்களில் இருந்து சற்று நிவாரணம் காணலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகளை நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினருடன் வெளியூர் சென்று வருவதற்கான வாய்ப்புண்டு.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்