ஜோதிடத்தின்படி, கிரகங்களின் இயக்கம் காரணமாக அவ்வப்போது பல வகையான யோகங்கள் உருவாகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது யோகங்கள் உருவாகின்றன. கிரகங்களின் இணைப்பின் காரணமாக, அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் ஜோதிடத்தில் மிகவும் முக்கிய கிரகங்களாக இருக்கும் சனி மற்றும் புதன் ஜனவரி 20 ஒன்றுக்கொன்று 60 டிகிரி இடைவெளியில் அமைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கி உள்ளன. சனி மற்றும் புதனால் உருவான இந்த யோகத்தால் 4 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெற இருக்கின்றனர். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

லாப திருஷ்டி யோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெற இருக்கின்றனர். அவர்களின் நிதி நிலை உயர இருக்கிறது. இதுவரை இருந்த கடன்கள் தீர்ந்து நிம்மது பெற முடியும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூல் ஆகும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். பேச்சாற்றல் மூலம் பெரிய காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மற்றவர்கள் உங்கள் மதிப்பை அறிந்து கொள்வார்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி மற்றும் பணத்தை குவிக்க இருக்கின்றனர். லாப திருஷ்டி யோகம் அவர்களுக்கு நல்ல பலன்களை வழங்க இருக்கிறது. நீங்கள் செய்யும் புதிய முதலீடுகள் உங்களுக்கு நன்மையை தரும். முதலீடுகள் மூலம் இரட்டிக் லாபம் கிடைக்கும். குடும்ப தகராறுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமை அடையும். குடும்பத்தில் தடைபட்ட நின்ற சுப நிகழ்ச்சிகள் மீண்டும் வேகம் எடுக்கும். சொத்து சேர்க்கை நடைபெறும். தாய் வழி மூலம் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி

லாப திருஷ்டி யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய பலன்களை கொடுக்க இருக்கிறது. தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இது வணிகத்தை விரிவுபடுத்த உதவும். இந்த காலகட்டத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். சமூக அந்தஸ்து உயரும். நீண்ட கால உடல் நல பாதிப்புகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
கும்பம்

சனி கும்ப ராசியில் இருந்து புதனுடன் சேர்ந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கி உள்ளது. இதனால் கும்ப ராசிக்காரர்கள் முழு பலனை அனுபவிக்க இருக்கின்றனர். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும், பெரிய அளவிலான நிதி உதவிகளும் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : புதனின் மாற்றத்தால் 2026ல் பண மழையில் நனைய போகும் ராசிகள் இவர்கள் தான்!!


