நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ராகு கேது 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கென தனி சொந்த ராசிகள் கிடையாது. நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்தவகையில், சூரியனின் மிதுன ராசி பெயர்சியுடன் விசுவா பசு வருடம் ஆனி மாதம் பிறக்கிறது. ஏற்கனவே, கடந்த மே மாதம் 14ஆம் தேதி, குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியான நிலையில், இரு கிரகங்களும் இணைந்து குரு ஆதித்ய யோகம் உருவாகிறது. குரு ஆதித்ய யோகம் சிலருக்கு நன்மை பயக்கும் என்றாலும், ராகுவின் பஞ்சம திருஷ்டி சூரியன் மற்றும் குரு மீது விழுவதால், சில ராசிகளுக்கு இதனால் சிக்கல்களும் பிரச்சனைகளும் ஏற்படலாம். சூரியன் மற்றும் குருவுக்கு ராகு எதிரி என்பதால், இது சில ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
கடகம்

செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். சேமிப்புகள் கரைந்து போகலாம். உடல் நலம் தொடர்பான பிரச்சனைகளும் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். நண்பர்களால் உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை அமையும். மிகவும் கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது. குடும்பத்தினரால் நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டால் அமைதியாக செல்வது நல்லது.
சிம்மம்

உறவுகள் மத்தியில் பிரச்சனை வரக்கூடும். வாழ்க்கையில் போராட்டம் அதிகமாக இருக்கும். விரும்பியது நிறைவேறாமல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். காதல் வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
விருச்சிகம்

வாழ்க்கையில் ஏற்படும் திடீர் மாற்றம், உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும் வகையில் இருக்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. காரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோரின் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வீண் பழிகள் நீங்கள் சுமக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எந்த காரியத்தை தொடங்கினாலும் அதிக முறை சிந்தித்து கொள்வது நல்லது. வெளியே செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.
மகரம்

உங்களை வீழ்த்த நினைக்கும் எதிரிகளிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறிய அளவில் உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கும் நிலையை தவிர்ப்பது நல்லது. அலட்சியத்தை தவிர்ப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஆழமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்

குடும்பத்தில் பதற்றங்கள் ஏற்படலாம். உடல்நல பாதிப்பும் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முடிவை சற்று தள்ளி போடுவது நல்லது. சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் தகராறுகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திலும் மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இதனையும் படியுங்கள் : 2025 செவ்வாய் பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிகள்!!