பொதுவாக கிரகங்கள் மாறும் பொழுது சுப அல்லது அசுப யோகங்களை உருவாகும். இவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், புதனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக மகர ராசிக்குள் சூரிய பகவான் பெயர்ச்சியாகியுள்ளார். இதனால் ஜனவரி 14 முதல் ஜனவரி 22ம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் சூரியன் – செவ்வாய் கிரகங்கள் எதிரெதிராக சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் மிதுனத்தில் வக்ர நிலையில் சஞ்சரித்து வருவதால், சூரியன், செவ்வாய் சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சில ராசிக்கார்கள் பாதிப்பை சந்திப்பார்கள். எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியை சேர்ந்தவர்களுக்கு சூரியன் – செவ்வாய் கிரகங்கள் சமசப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக இழப்பு, மன கவலை ஏற்படுத்தும். பணியிடத்தில் சரியாக திட்டமிட்டு வேலைகளை செய்தால் பணி அழுத்தத்தைச் சமாளிக்கலாம். புதிய தொழில் தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற பணம் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும். எதிர்காலம் தொடர்பான கவலை மற்றும் குழப்பம் உருவாவதற்கான சூழல் உள்ளது. மன அழுத்தங்கள் அதிகரிக்கும். உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
கடகம்

கடக ராசியில் செவ்வாயும், சப்தம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கின்றார். இதனால் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான சூழல் இருக்காது. காதல், குடும்ப வாழ்க்கை, வேலையில் பதற்றமான சூழல் இருக்கும். வேலையில் பதற்றமான சூழல் உண்டாகும். தவறான முடிவினால் பொருளாதார இழப்பு ஏற்படக் கூடும். உறவுகளிடம் கருத்து வேறுபாடு காரணமாக கவுரவம் பாதிக்கப்படலாம்.
பெரியவர்களுடன் தேவையில்லாத கருத்து வேறுபாடுகளும், மனக் கசப்புகளும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படும். புதிய உறவுகள் உருவாகும் என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சிம்மம்

சிம்ம ராசிக்கு மிகவும் சவாலான காலமாக இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எதிர்பார்த்த லாபம் இருக்காது. தேவையற்ற பயணங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். சில தேவையற்ற பயணங்களால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே பிரச்னைகள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, உறவில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் சில தடைகளை சந்திக்க கூடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். நீண்ட பயணங்களால் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.
கும்பம்

கும்ப ராசிக்கு சப்தம யோகம் மிக கடினமானதாக அமையும். இதனால் உங்களின் குடும்பத்தில் இணக்கமற்ற சூழலும், தேவையற்ற குடும்ப சண்டை மன கவலையை அதிகரிக்கும். உங்களின் தைரியம் குறையும். உங்களுடைய மன தைரியம் குறையும். நம்பிக்கை இழப்பீர்கள். வேலையில் திட்டமிட்டு செய்து முடிக்க முயற்சிப்பது நல்லது. உங்கள் உடல் நலம் பேணுதல், வீட்டை பழுது பார்த்தல் போன்ற விஷயங்களுக்கு அதிக செலவு செய்ய வாய்ப்புள்ளது. வாகனம் பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். புதிய திட்டங்களைத் தவிர்ப்பது நல்லது.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


