சுக்கிர பகவான் செல்வதற்கும், செழிப்பிற்கும் பெயர் பெற்றவர்.ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களின் வாழ்வில் பணம் சார்ந்து எவ்வித பிரச்னையும் வராது. ஒவ்வொரு மாதமும் சுக்கிர பகவான் வெவ்வேறு ராசிகளில் பெயர்ச்சி அடைவார். ஜோதிடர்களின் கணிப்புபடி, வரும் ஜன. 28ஆம் தேதி அன்று சுக்கிரன் பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிர பெயர்ச்சியால் சில ராசிகளுக்கு திடீரென பணம் கொட்டும். அந்த வகையில் தற்போது நடக்கவிருக்கும் சுக்கிர பகவானின் பெயர்ச்சியால் பலன் பெற போகும் ராசிக்காரர்கள் யார் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உறவுகளிடம் அன்பு அதிகரிக்கும். வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பயணங்கள் மூலம் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
ரிஷபம்

இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவித நன்மைகளைப் பெறுவார்கள். மேலும் கல்வி மற்றும் வேலையில் சிறந்து விளங்குவார்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் நல்ல தருணம். பதவி உயர்வும், சம்பள உயர்வும் சேர்ந்த வரும். இதனால் பொருளாதாரம் வலுவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்திலும் லாபம் அதிகரிக்கும். பழைய முதலீட்டில் இருந்து நல்ல வருமானம் வரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆரோக்கியத்தில் சிறிய முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்

இந்த ராசிக்காரர்களுக்குத் தொழில் வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும். உங்களுக்கு என தனி அடையாளத்தை உருவாக்குவீர்கள். நீண்ட காலமாக நடைபெறாமல் இருக்கும் பணிகள் நிறைவு பெறும். வேலையிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். வாழ்க்கை துணை ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்பு கைக்கூடும்.
கடகம்

சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் உங்களுக்கு தொழில் மற்றும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். மத விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உடல்நலன் சிறப்பாக இருக்கும். தீராத நோய் கூட குணமாகும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பொருளாதார அளவிலும் சிறப்பாக இருப்பீர்கள். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்




