நிழல் கிரகம் எனவும் சர்ப்ப கிரகம் எனவும் அழைக்கப்படக்கூடிய ராகு மற்றும் கேது ராசி கால சக்கரத்தில் எதிராக அமரக்கூடிய கிரகங்கள். ராகு தற்போது மீன ராசிகளும் கேது தற்போது கன்னி ராசி இடம் உள்ளனர். இவர்கள் மே 19ஆம் தேதி மற்ற ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார்கள். ராகு பகவான் கும்ப ராசிக்கும் கேது பகவான் சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக போகிறார்கள். இந்த கிரகங்கள் நற்பலனை தராது என்றாலும் அவர்களின் அமைப்பால் சிலர் ராசிகள் சுப பலன்களை பெறப் போகிறார்கள். அந்த வகையில் வேலை தொழிலில் முன்னேற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த குறிப்பிட்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

மேஷ ராசிக்கு கேது பகவானின் அமைப்பால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் பார்க்கக்கூடிய தொழில் வியாபாரம் அனைத்திலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை தொழில் தொடர்பாக புதிய யோசனைகள் மூலம் சிறப்பான வெற்றியை பெறலாம். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள் அதற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மிதுன ராசி

மிதுன ராசிக்கு தைரிய ஸ்தானத்தில் கேது பகவான் அமரப் போகிறார். இதன் காரணமாக உங்களுடைய எல்லா துறைகளிலும் சிறப்பான வெற்றி கிடைக்கும். செயலில் வீரமும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகளையும் வென்று வெளி பார்க்கக்கூடிய இடத்தில் மதிப்பு மரியாதையை பெற்று நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் இருக்கும். நீண்ட காலமாக இருக்கக்கூடிய நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் இருக்கும்.
கடக ராசி

கடக ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவின் சஞ்சாரம் நடக்கப்போகிறது எனவே இரும்பு எண்ணெய் மற்றும் மதுபானம் தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும் முன்னேற்றமும் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய உறவுகள் கிடைக்கும் லாபமும் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுடைய முன்னேற்றத்திற்கு உதவும். பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும் வாழ்க்கையில் அடுத்த கட்ட வெற்றி பெறுவதற்கான சூழ்நிலை உருவாகும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.
கன்னி ராசி

கன்னி ராசியை சேர்ந்தவர்களுக்கு ராகு கேதுவின் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். பழைய கடன்களில் இருந்து விடுபடுவதற்கு உண்டான அனைத்து வழிகளும் கிடைக்கும். உடல்நலத்தில் நல்ல மாற்றம் இருக்கும். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து நிம்மதி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும் பொருளாதார நிலை மேம்படும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்கு லாப ஸ்தானத்தில் கேதுவின் சஞ்சாரம் நடக்கிறது இதன் காரணமாக உங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குருவின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் தடைப்பட்டு வந்த வேலைகளை முடிக்க முடியும். தொழில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையாக செயல்பட்டால் முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெற முடியும். தொழில் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்கும் போது புத்திசாலித்தனமும் நிதானமும் அதிகமாக தேவை.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்!!