ஜோதிட ரீதியாக கிரகங்களின் ராசி பெயர்ச்சியை தவிர நட்சத்திர பெயர்ச்சியும் கூட ஒரு முக்கியமான நிகழ்வு தான். இதில் நீதி கடவுளாக பார்க்கப்படும் சனிபகவான் ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடையப் போகிறார். சனிபகவானின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். ஏப்ரல் 28ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழையப் போகிறார் ஜூன் 7-ம் தேதி வரையில் அந்த நட்சத்திரத்தில் தான் சனி பகவான் இருப்பார். அதே நாளில் மாலை 4.45 மணிக்கு அடுத்த நட்சத்திரத்திற்கு நுழைய போகிறார். இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உண்டாகப் போகிறது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

சனிபகவானின் இந்த நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அனைத்து வேலைகளும் முடிவடையும். செல்வம் செழிப்பு மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலிலும் வளர்ச்சி அதிகரிக்கும் கடனிலிருந்து நிவாரணமும் கிடைக்கும்.
சிம்ம ராசி

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் பலவிதமான நன்மைகள் உண்டாகும். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் வெற்றி உண்டாகும். பொருளாதார ரீதியாக வாழ்க்கை சிறப்பாக அமையும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திரம் மாற்றம் மங்களகரமான பலன்களை கொடுக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நிதி ஆதாயம் உண்டாகும். முதலீட்டு மூலம் நல்ல நிதி லாபம் கிடைக்கும். புதிய தொழிலையும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அமையும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த மாற்றம் நிலுவையில் இருந்த வேலைகளை முடிவு செய்து கொடுக்கும். பொருளாதார ரீதியாக ஏற்பட்ட அனைத்து சிக்கல்களும் நிறைவேறும். உடல் நலம் நன்றாக இருக்கும். மன அழுத்தம் குறையும். வேலை பார்க்கக்கூடிய இடத்தில் சம்பளம் அதிகரிக்கும். மேலும் தொழிலிலும் பொருளாதாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் வாழ்க்கையில் பெரிய மாற்றம் உண்டாகும். தொழிலதிபர்களுக்கு லாபம் கிடைக்கும் திருமணம் கைகூடி வரும். சம்பளம் அதிகரிக்கும். நிலுவையில் இருந்த அனைத்து பணிகளும் நடந்து முடியும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!


