ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார் இவருடைய தாக்கம் நீண்ட காலம் இருக்கும். இந்நிலையில், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி மதியம் 12:43 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து உதயமாகிறார். அந்த வகையில், சனி பகவான், குரு பகவானுக்கு உகந்த ராசியான மீனத்தில் உதயமாவதால் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

சனி பகவான் இந்த ராசியில் 12வது வீட்டில் உதயமாவார். இதனால் வாழ்வில் இருந்த அத்தனை கஷ்டங்களும் முடிவுக்கு வரும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம்

சனி பகவானின் உதயம் இவர்களுக்கும் சுபமாகும். மிதுன ராசிகளின் 8ம், 9ம் வீட்டில் சன பகவான் இருப்பார். 10ம் வீட்டில் சனி உதயமாவார். இதனால் வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். ஆசிரியர்கள், பெற்றோர், ஆலோசகர்கள் தரப்பில் நல்ல ஆதரவு கிடைக்கும். முன்பு செய்த கடின உழைப்புக்கு இப்போது பலன் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல உயர்வு இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சுத் திறமைகள் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு தான் சனி உதயம் அதிக பலனை தரும் எனலாம். சனி பகவானின் அருளால் எந்த தொழிலில் இருந்தாலும் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நினைத்தது நடக்கும். சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 குரு பெயர்ச்சி வெற்றி பெறும் ராசிகள்


