நவகிரகங்களில் மிக முக்கியமானவராகவும், நீதிமானாக திகழ்பவர் சனி பகவான். பலருக்கும் சனி பகவான் என்றால் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படுவதுண்டு. ஜோதிடத்தைப் பின்பற்றாதவர் கூட சனி பெயர்ச்சியின் போது அவரின் ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ஆர்வம் காட்டுவர். சனி பகவான் கஷ்டத்தை மட்டுமல்ல, அளவில்லாத நன்மைகளையும் வழங்கக் கூடியவர். நீதியின் கடவுளான இவர் மார்ச் மாதம் 29 ஆம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். அனைத்து கிரகங்களிலும் மங்களகரமானதும் சுபமானதும் குரு பகவான். அவர் கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை வழங்குபவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் இந்த ஆண்டு மே மாதம் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சியும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. இந்த கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் கர்ம வினை கடவுளான சனி பகவான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் குரு பகவானும், சனி பகவானும் முக்கிய பெயர்ச்சிகளை மேற்கொள்ளவுள்ளனர், இதனால் சில ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கும். யார் அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு வக்ர பெயர்ச்சியும் சனி வக்ர நிவர்த்தியும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அவ்வப்போது திடீர் பண லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இனிமை நிலைத்திருக்கும். சமூகத்தில் உங்களுக்கு மிகுந்த மரியாதை கிடைக்கும். வெளிநாடு செல்லலாம். வீட்டில் சில சுப அல்லது நல்ல நிகழ்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பல பெரிய நன்மைகளைப் பெறலாம். செலவுகள் குறைய வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் வரபிரசாதகமான காலமாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம்

சனி வக்ர நிவர்த்தியும் குரு வக்ர பெயர்ச்சியும் துலாம் ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த காலத்தில் வேலை மற்றும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறலாம். வணிகர்கள் சில பழைய முதலீட்டால் பயனடைவார்கள். நீண்டகால சவால்கள் மற்றும் பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம். கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். தடைப்பட்ட வேலைகளை முடிக்க வலிமை கிடைக்கும். வீடு, மனை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். மாணவர்களின் படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்

சனி வக்ர நிவர்த்தியும் குரு வக்ர பெயர்ச்சியும் கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். தொழிலதிபர்கள் நிதி ஆதாயத்தை பெறுவார்கள். புதிய கூட்டாளிகள் தொழிலில் இணைவார்கள், இது மிகவும் நன்மை பயக்கும். சொகுசு வாழ்க்கை கிடைக்கும். வியாபாரத்தில் நன்மை உண்டாகும். சம்பள உயர்வு, பதவி உயர்வு, மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கலாம். சொந்த தொழிலில் முன்னேற்றம் அடைய முடியும் என்பதால் லாபமும் உயரக்கூடியதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு மற்றும் சனி பகவான் பெயர்ச்சி 2025


