ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடிய ஒவ்வொரு சனி பகவான் இவர் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார் இவருடைய தாக்கம் நீண்ட காலம் இருக்கும். இந்நிலையில், சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வரும் மார்ச் 31ஆம் தேதி மதியம் 12:43 மணிக்கு மீன ராசியில் பெயர்ச்சி அடைந்து உதயமாகிறார். அந்த வகையில், சனி பகவான், குரு பகவானுக்கு உகந்த ராசியான மீனத்தில் உதயமாவதால் சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை பெறுவார்கள். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சைத்ர நவராத்திரியை ஒட்டி, சனி பகவான் இந்த ராசிக்காரர்களுக்கு அருளை வழங்குவார் எனலாம். இதனால், நல்ல செய்திகள் தேடி வரும். புதிய வேலைகளை தொடங்கலாம். இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். வேலையிலும் பதவி உயர்வு மற்றும் லாபம் கிடைக்கும். தொழிலிலும் பண வரவு அதிகமாகும். ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். திடீர் லாபம் பெறலாம்.
மிதுனம்

சைத்ர நவராத்திரியை முன்னிட்டு மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை சனி பகவான் அளிப்பார். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் லாபம் கொட்டும். சனி பகவானின் அருளால் பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. நீண்ட நாள்களாக தடைப்பட்டிருந்த வேலைகள் உடனே நடக்கும். தொழில் வளர்ச்சி அடையும். புதிய வாய்ப்புகளை பெறலாம். சமூக அந்தஸ்து உயரும். கௌரவமும் அதிகரிக்கும். வேலையில் பெரிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரும். நிஜமாகவே இது ராஜயோக காலமாகும்.
கன்னி

சைத்ர நவராத்திரி முன் உருவாகும் இந்த அரிய பஞ்சகிரஹி யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. சுபமான இந்த காலகட்டத்தில் வணிகத்தில் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்பை விட பணப்புழக்கம் அதிகமாகும். முதலீட்டில் நல்ல வருமானம் வரும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும்.
தனுசு

இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்கள் புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும். பொருளாதார பிரச்னையும் தீரும். செழிப்போடு வாழ்வதற்கான வாய்ப்புகள் திறக்கும். சனி பகவானின் அருளால் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் வளர்ச்சியும், உத்தியோக பதவி உயர்வு உண்டாகும். வெளிநாட்டு யோகம் செல்வதற்கு நேரம் கூடி வந்துள்ளது. திருமண விசயங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.
கும்பம்

இந்த ராசிக்காரர்களுக்கும் இது நல்ல காலம் ஆகும். நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் உங்களை தேடி வரும். முதலீடும் நல்ல வருமானத்தை கொடுக்கும். வீடு கட்டி வருபவர்கள் விரைவில் கட்டுமான பணியை முடிக்கலாம். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசி


