ஜோதிடத்தில், ஒருவருக்கு வீரம், தைரியம், சக்தி, ஆற்றலைத் தரக்கூடிய காரணியான கிரகம் செவ்வாய் என கருதப்படுகிறது. செவ்வாய் யாரை ஆசீர்வதிக்கிறாரோ, அவர் தனது ஆற்றலை சரியான வகையில் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ராசி மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் ஏப்ரல் 3ம் தேதி மிதுன ராசியிலிருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். கடக ராசியில் நீசம் அடையக்கூடிய செவ்வாய் பகவான் சில ராசிகளுக்கு பதவி உயர்வு, பண சேர்க்கை என பலவிதத்தில் நன்மைகளை தரப் போகிறார். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

செவ்வாய் பகவான் 2ம் வீடான தன ஸ்தானத்தில் பெயர்ச்சியாக உள்ளார். செவ்வாய் பெயர்ச்சியால் உங்களின் குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். உங்களுக்கு செல்வம் சேருதல், மரியாதை அதிகரித்தல் என நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் சேமிப்பு அதிகரிக்கும். இளைய சகோதரருடன் இணக்கம் ஏற்படும். சமூக செயல்பாடுகளிலும், ஆன்மிக விஷயத்திலும் உங்கள் ஆர்வம் மிக அதிகமாக இருக்கும். உங்களின் பழைய கடன்கள் தீரும். இழந்த பணத்தை மீட்பதற்கான நல்ல வாய்ப்புகள் ஏற்படும்.
கன்னி

கன்னி ராசிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். கடினமான சூழலில் உங்களின் நண்பர்கள், உறவினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. செல்வ வளம் கூடும்.
கடந்த காலத்தில் நீங்கள் செய்த முதலீடு, கடின உழைப்பிற்கான பலனை இப்போது பெற வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட முடியும். திடீர் பண பலமும், லாபமும் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
விருச்சிகம்

விருச்சிக ராசி அதிபதி செவ்வாய் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் சிந்தனை முன்பை விட நேர்மறையாக இருக்கும். உங்கள் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. அது தொடர்பான லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு, சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலைட முடியும்.
கும்பம்

கும்ப ராசிக்கு 6ம் வீடான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்ய உள்ளதால் உங்களின் செயல்களில் சிறிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும், அதை சமாளித்து முன்னேறுவீர்கள். நிலம், மனை, வீடு தொடர்பான தகராறுகள் தீரும். அதை வாங்கும் வாய்ப்புகள் உடு. எடுத்த காரியங்கள் வெற்றியடையும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகளும் நடக்கும். உங்கள் வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இதனையும் படியுங்கள் : 2025 சனி பெயர்ச்சியால் சிறப்பான வாழ்க்கையை பெறப்போகும் ராசிக்காரர்கள்!!


