நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார் குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி குரு தனுசு மற்றும் மீன ராசிகளை ஆளும் கிரகமாகக் கூறப்படுகிறது. குரு ஒரு வருட இடைவெளியில் தனது ராசியை மாற்றுகிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். அடுத்த ஒரு ஆண்டு குருபகவான் இந்த மிதுன ராசியில் பயணம் செய்தார். இந்நிலையில் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இந்த சம்பவம் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று நிகழ உள்ளது. குரு பகவானின் மிதுன ராசி அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. யார் அந்த ராசிகள் என்பது குறித்து இந்த ஆன்மிகப் பதிவில் காணலாம்.
மேஷம்

புதிய வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். தொழிலில் பொருளாதார ஆதாயம் ஏற்படும். வாழ்க்கையில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் குறையும். புதிய வருமான வழிகள் திறக்கப்படலாம். வாங்கிய கடன்களில் இருந்து விடுபடலாம். நேர்மறை எண்ணங்களுடன் முன்னேறுவீர்கள். அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக அரசாங்க வேலையில் இருந்த தடைகள் நீங்கும்.
ரிஷபம்

தொழிலில் லாபம் கிடைக்கும். நல்ல வருமானத்தைத் தரும். நிதி நிலை நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் சில நல்ல பரிசுகள் கிடைக்கும். பல துறைகளில் அபார வெற்றி பெறலாம். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். வெளிநாட்டு பயணம் மூலம் தொழிலில் லாபம் பெருகும். உடன் பிறந்தவர்களுடன் உறவு மேம்படும்.
கடகம்

வருமானம் பெருமளவில் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளப்படும். திருமண முயற்சியில் நல்ல செய்தி கிடைக்கும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் இப்போது முடிவடையும். அலுவலகத்தில் பல விதமான ஆதாயங்களை நீங்கள் பெறலாம். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியமும் மேம்படும்.
துலாம்

வருமான அதிகரிக்கும். நிதி நிலைமை வலுவடையும். வருமானமும் அதிகரிக்கக்கூடும். குருவின் அருளால் அறிவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கக்கூடும். உங்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகள் வரக்கூடும். இறக்குமதி-ஏற்றுமதி தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
மீனம்

கூடுதல் வருமானம் அதிகரிக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெறலாம். தொழிலில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி காணப்படும். வேலை செய்பவர்களுக்கு பணியிடத்தில் முழு ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அலுவலர்களுடன் நல்லுறவு ஏற்படும். இது உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பங்குச் சந்தையில் கவனமாகப் பணம் போட்டால் வெற்றி பெறலாம். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் மோசமான பலன்களை பெறப்போகும் மூன்று ராசிக்காரர்கள்!!