ஜோதிட ரீதியாக குருபகவான் முழு சுபர் என்று அழைக்கப்படக்கூடியவர். அவர் ரிஷப ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். மே 14ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக போகிறார். குருவின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் வாழ்கையில் மகிழ்ச்சி செழிப்பு மரியாதை என அனைத்துமே கிடைக்கும் அந்த ராசிகளைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ரிஷப ராசி

ரிஷப ராசிக்கு தன அதிபதியான குரு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்ய போவதால் வீட்டில் வருமானம் அதிகரிக்கும். சேமிப்பும் அதிகரிக்கும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும் திறமை பாராட்டப்படும். மாணவர்கள் படிப்பை முடிப்பதில் முன்னேற்றத்துடன் செயல்படுவார்கள். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசுத்துறை தொடர்பான வேலைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல வருமானமும் நிதிநிலை முன்னேற்றமும் கிடைக்கும்.
துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி காரணமாக பல நல்ல பலன்கள் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். பலவிதத்தில் நன்மைகள் தேடி வரக்கூடும். நீங்கள் செய்யக்கூடிய தொழில் வியாபாரம் தொடர்பான விஷயத்தில் முன்னேற்றமும் லாபமும் பெறுவீர்கள். வாழ்க்கையில் எதிர்பார்த்த எதிர்நிலை முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. குடும்பத் தொழில் செய்தால் தந்தையின் ஆலோசனையோடு செய்தால் வெற்றி பெறுவீர்கள். திருமண பாக்கியமும் கிடைக்கும் நீங்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
தனுசு ராசி

தனுசு ராசிக்கு குருபகவான் சம சப்தம ஸ்தானமான ஏழாம் வீட்டில் சஞ்சாரம் செய்ய போவதால் ஒவ்வொரு துறையிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக வரைந்திடும் இளைஞர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும். கல்வி தொடர்பாக போடும் கடின முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குருவின் பெயர்ச்சி காரணமாக பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும் அரசுத்துறை தொடர்பான வேலைகள் நிறைவேறும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள் எதிரிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் அன்புக்குரியவர்களின் ஆதரவால் மனநிறைவு கிடைக்கும்.
கும்ப ராசி

கும்ப ராசியை சேர்ந்தவர்களுக்கு குரு பகவான் ஐந்தாம் வீட்டில் இருந்து அற்புதப் பலன்களை கொடுப்பார். கும்ப ராசிக்கு ஏழரை சனிக்காலம் நடக்கக் கூடியதாக இருந்தாலும் கூட குருவின் பெயர்ச்சியால் அவருடைய அருளால் மனநிறைவும் பெரிய பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் முடியும். காரிய தடைகள் அனைத்தும் நடந்தேறும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்காவிட்டாலும் திருப்தியாவது கிடைக்கும். வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியான சூழலும் நிலவும் தேவையற்ற செலவுகளை தவிர்த்தால் பணியிடத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். முதலீடுகள் அனைத்தும் நல்ல லாபத்தை பெற்று தரும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் பண மழையில் நனையும் ராசிகள்


