நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றும் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். வரும் ஜூன் 15, 2025 அன்று காலை 06:44 மணியளவில், சூரியன் மிதுன ராசியில் குடியேறுகிறார். இந்த பெயர்ச்சியின் மூலம், சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மிதுன ராசியில் சூரியனும், குருவும் இணைகின்றனர். ஆக, இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை, நேர்மறையான ஆற்றலை உண்டாக்கி நன்மைகள் பல அளிக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் எதிர்பாராத யோகத்தை அளிக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்ப்போம்.
ரிஷபம்

மிதுன ராசியில் உண்டாகும் இந்த திரிகிரக யோகம், ரிஷப ராசிக்கார்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதன் விளைவாக பூர்வீக சொத்து தொடர்பாக இதுநாள் வரை நீடித்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காண்பார்கள். பணியிடத்தில் நிலவி வந்த பிரச்சனைகள், மன அழுத்தமான சூழல் விலகும். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரம் தொடர்பாக பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. வேலை தொடர்பான பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மிதுனம்

சூரியனின் பெயர்ச்சியால் மிதுன ராசியில் உண்டாகும் இந்த திரி கிரக யோகம்; மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் எதிர்பாராத பலன்களை அளிக்கவுள்ளது. தொழிலில் உண்டாகும் சவால்களை உங்கள் நேர்த்தியான சிந்தனைகளால் வென்று காட்டுவீர்கள். உங்களின் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
துலாம்

மூன்று கிரகங்களின் சேர்க்கையால் உண்டாகும் திரி கிரக யோகம், துலாம் ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இதன் காரணமாக, உங்கள் குடும்பத்தினரின் ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ப நல்ல வேலை அமையும். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள்.
தனுசு

சூரியன், குரு மற்றும் புதன் சேர்க்கையால் உண்டாகும் திரிகிரக யோகம், தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உடன் பணிபுரியும் நபர்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கையில் சிலருக்கு நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. வெளியூர், வெளிநாடு தொடர்பான வேலைகளில் வெற்றி கிடைக்கும். வீடு, மனை என ரியல் எஸ்டேட் தொடர்பாக லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த திரிகிரக யோகம், 5-வது வீட்டில் மாற்றத்ததை உண்டாக்குகிறது. அதேநேரம், ஏழரை நாட்டு சனியின் கடைசி கட்டமும் நடக்கிறது. பெற்றோர் நலன் வேண்டி, ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனம், வீடு, மனை வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சியான பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. அதற்கான செயல்பாடுகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள்.
இதனையும் படியுங்கள் : 2025 ராகு கேது பெயர்ச்சியால் பலன் பெறும் ராசி