நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்குகிறார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும்பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இன்னும் சில தினங்களில் மேஷ ராசிக்கு மாறப் போகிறார். சூரியன் தற்போது ஒரு வருடம் கழித்து மேஷ ராசிக்குள் நுழையப் போகிறார், வரும் ஏப்ரல் 14, 2025 இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது வரும் ஏப். 14ஆம் தேதி சூரிய பகவான் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைவதால் சில ராசிகளுக்கு நன்மை வரும். அந்த வகையில், சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழைவதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான். யார் அந்த 3 ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்
விருச்சிகம்

சூரிய பகவானின் அஸ்வினி நட்சத்திர பெயர்ச்சி 6வது வீட்டில் இந்த ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இது பணியிடத்தில் தாக்கத்தை உண்டாக்கும். ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு ஏற்படும். போட்டிகளில் நீங்கள் முன்னிலையில் இருப்பீர்கள். மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உங்கள் தாயின் துணை உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெறலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவுகள் மேம்படும்.
சிம்மம்

சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பெரியளவில் உகந்ததாக இருக்கும். குடும்ப பிரச்னைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நீடித்திருக்கும். வேலையிடத்தில் உங்களின் வேலைக்கு பாராட்டுகள் குவியும். ஆரோக்கியமும் பலமடையும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி பதவி உயர்வு கிடைக்கும். சூரியனின் பெயர்ச்சியால் உங்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மிதுனம்

சூரிய பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வருவாய் வழிகள் உண்டாகும். பொருளாதார சூழல் வலுவடையும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். இந்த சமயத்தில் என்ன முதலீடு செய்தாலும் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். கடின உழைப்பின் மூலம் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு உருவாக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!


