ஜோதிடத்தில் புதன் கிரகத்திற்கு என்று ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது. புதன் கிரகமே கிரகங்களின் அதிபதி. புதன் புத்திசாலித்தனம், வணிகம், பேச்சு தொடர்பு, பொருளாதாரம், பங்கு சந்தை போன்றவற்றை தீர்மானிக்க கூடியவர். சக்தி வாய்ந்த புதன் கிரகம் பிப்ரவரி 15ஆம் தேதி அதிகாலை 5.08 மணிக்கு சதய நட்சத்திரத்தில் நுழையப்போகிறது. இந்த சதய நட்சத்திரத்தின் அதிபதி ராகு பகவான் ஜோதிடத்தின் படி புதன் பகவானுக்கும் ராகபகவானுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே புதனின் இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது. அந்த அதிர்ஷ்டமான ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் மிகப்பெரிய அளவில் நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும். இதனுடன் ஆடம்பரங்களும் வசதிகளும் வேகமாக அதிகரிக்கும். வணிகத்திலும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. ஒரு புதிய தொழிலை தொடங்க நினைத்தால் இந்த காலகட்டத்தில் தொடங்கிக் கொள்ளலாம். உங்கள் வணிகத்தின் மூலம் பலருடனான உறவுகள் வலுவடையும். புதிய வேலை செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களிடமிருந்து உங்களுக்கு முழு ஆதரவு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி ராசி

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் ஆறாவது வீட்டில் நுழையப் போவதால் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். பொருளாதார நிலைமை மாறும். வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு காண முடியும். இதன் மூலம் பல வருவாய ஆதாரங்கள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்தால் அது நல்ல லாபத்தையும் உங்களுக்கு ஈட்டி தரும். தொழில்துறையிலும் வியாபாரத்திலும் நீங்கள் மிகவும் சமர்தயமாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இதன் மூலம் நிறைய நன்மைகளையும் பெறலாம். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருப்பதால் பணத்தை சேமிப்பதில் நீங்கள் வெற்றியை பெறுவீர்கள்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் கிரகத்தின் நட்சத்திர மாற்றம் ஆலமரத்தை கொண்டு வந்து சேர்க்கும். உங்கள் ராசியின் லக்ன வீட்டில் புதன் பகவான் இருப்பார். அத்தகைய சூழ்நிலையில் இந்த ராசியில் பிறந்தவர்கள் அவர்களுடைய குடும்ப சொத்துக்களை அனுபவிக்கும் வாய்ப்பினை பெறுவார்கள். தொழில் துறையில் நிறைய நன்மைகளை பெற முடியும். புதிய வாய்ப்புகளையும் பெற முடியும். காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால் லாபம் காண முடியும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் பல துறைகளில் வெற்றியும் அடைவீர்கள்.
இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சி 2025 பலன்கள்