நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனிபகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தற்போது கும்ப ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார் சனி பகவான். சூரிய பகவான் பிப்ரவரி 12 இல் கும்ப ராசிக்குள் நுழைகிறார். சனியும், சூரியனும் குறிப்பிட்ட டிகிரிக்குள் வரும்போது சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார். இவர் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை அஸ்தமன நிலையில் இருப்பார். சனி அஸ்தமனத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு, இந்த நேரம் நன்றாக இருக்கும். சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனம் ரிஷப ராசியினருக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நேரத்தில் சிறப்பு நன்மைகள் கிடைக்கக்கூடும். இது உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் செழிப்பையும் கொண்டு வரும். உங்கள் நிதி நிலைமை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயங்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிம்மம்

மீன ராசிக்கும் சனி பெயர்ச்சிக்கு முன் வரும் சனி அஸ்தமனம் சாதகமாக இருக்கும். மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் அதிக நன்மைகளைப் பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடியும். இந்த நேரத்தில் அவர்களது முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் உறவுகளுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். சொத்துகள், வீடு, நிலம், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் உண்டு.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அஸ்தமனம் நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். செல்வமும் செழிப்பும் அதிகரிக்கும். இது உங்களை வசதியான மற்றும் வளமான வாழ்க்கைக்கு இட்டுச் செல்லும். உங்கள் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள், தகராறுகள் நீங்கும். கடின உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள்.
தனுசு

சனி அஸ்தமனத்தின் தாக்கத்தால் தனுசு ராசிக்கார்ரகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும். தனுசு ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். செல்வம், சொத்து மற்றும் அதிகாரம் அதிகரிக்கும். வீடு, மனை தொடர்பான ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மீனம்

சனி பெயர்ச்சிக்கும் முன் நிகழவுள்ள சனி அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு, இது மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் திருப்திக்கான நேரமாக இருக்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ப செலவு செய்ய முடியும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள். நீண்டகாலமாக வேலையை மாற்ற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை அமையும்.
இதனையும் படியுங்கள் : சனி புதன் சேர்க்கை 2025