அனைத்து கிரகங்களுமே ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தங்களுடைய ராசிகளை நிச்சயமாக மாற்றுவார்கள் அப்படி மாற்றும் போது அதற்கான பலன்கள் 12 ராசிகளுக்கும் கிடைக்கும். அந்த வகையில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடிய சனிபகவான் 2025ல் ராசி மாற்றம் அடையப் போகிறார். இது ஜோதிடத்தில் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படுகிறது. 2025 மார்ச் 29ஆம் தேதி அன்று சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருந்து குரு ராசியான மீன ராசிக்கு மாறப்போகிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட போகிறது. இதனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் வாழ்க்கையில் நடக்கப்போகிறது. பலவிதமான வெற்றிகளையும் அந்த ராசிக்காரர்கள் பெறப் போகிறார்கள் அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி

குருவின் ராசியான மீன ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான பல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயர்ந்து வீடு மனை வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலை பார்க்கக் கூடிய இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு என நல்ல நிகழ்வுகள் நடக்கும். குழந்தைகள் மூலம் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். வியாபார உயர்வு அதிகமாக கிடைக்கும்.
மிதுன ராசி

மிதுன ராசியினருக்கு 2025 மிகவும் சிறப்பாக அமையும். தொழில் செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்பவர்களுக்கும் இது நல்ல காலமாக அமையும். வேலையில் முன்னேற்றம் அதிகரிக்கும். சம்பளம் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. அனைத்திலும் வெற்றி தானாகவே அமையும்
மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். புத்தாண்டில் வாழ்க்கையில் சாதகமான பல மாற்றங்கள் கிடைக்கும். புதிய வேலை தொடங்க நல்ல காலமாக அமையும். முதலீடுகள் செய்தால் லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அனைத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அதிக நன்மைகள் உண்டாகும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்
அலுவலகப் பணிகளில் பதவி உயர்வு சம்பள உயர்வு என அனைத்தும் கிடைக்கும். குறிப்பாக தொழில் செய்பவர்களுக்கு தொழில் அதிபர்களுக்கு இது நல்ல காலம். தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண யோகம் கூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025ல் 12 ராசிகளும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்


