நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கன்னி மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில், புதன் கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் ராசிகள் இடையே பெயர்ச்சி அடையும். தற்போது புதன் பகவான் மீன ராசியில் இருக்கிறார். வரும் மே மாதம் புதன் பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். ஜோதிட கணக்கின்படி, வரும் மே 17ஆம் தேதி அன்று காலை 4:45 மணிக்கு புதன் பகவான் மேஷ ராசியில் அஸ்தமனம் ஆகிறார். 23 நாள்கள் மேஷத்தில் புதன் இருப்பார். புதன் பகவானின் அஸ்தமனத்தால் 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு மட்டும் கூடுதல் நன்மை கிடைக்கும். யார் அந்த ராசிக்காரர்கள் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்

புதன் கிரகத்தின் அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களின் 7ம் வீட்டில் உருவாகிறது. இதனால் இவர்களுக்கு திடீர் பண பலன்கள் கிடைக்கும். தேவையற்ற செலவுகளும் அதிகரிக்கலாம், அதில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சியாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
கன்னி

புதன் கிரகத்தின் அஸ்தமனத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் நன்மை உண்டாகும். கடின உழைப்பால் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள், வெற்றியும் கிடைக்கும். பூர்வீக சொத்து உங்களை தேடி வரலாம். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.
ரிஷபம்

இந்த காலகட்டத்தில் இவர்களின் பொருளாதாரம் பலப்படும். வருமானம் அதிகரிக்கும், நீண்ட நாள்களாக வராமல் இருந்த பணம் உங்கள் கைகளுக்கு வந்துசேரும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
இதனையும் படியுங்கள் : 2025 க்கான கஜகேசரி யோக பலன்கள்