Home ஆன்மிகம் செவ்வாய் கிரகம் பகைவீட்டில் அமைவதால் சிக்கலில் மாட்டப் போகும் சில ராசிகள்!!

செவ்வாய் கிரகம் பகைவீட்டில் அமைவதால் சிக்கலில் மாட்டப் போகும் சில ராசிகள்!!

தைரியம் ஆற்றல் வேகம் வீரம் போன்றவற்றை தரக்கூடியவர் செவ்வாய் பகவான். கடக ராசியில் பின்னோக்கி நகரும் செவ்வாய் பகவான் பகை ஸ்தானமான மிதுன ராசியில் ஜனவரி 21ஆம் தேதி முதல் பயணம் செய்யப் போகிறார். பிப்ரவரி 24ஆம் தேதி வக்கிரமித்து அடைந்து ஏப்ரல் மூன்றாம் தேதி மறுபடியும் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இதனால் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் மூன்று மாத காலத்திலும் சில ராசியினர் பலவகையான பிரச்சனைகளில் சிக்க வாய்ப்புள்ளது. அந்த ராசிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

மிதுன ராசி

செவ்வாய் பகவான் வக்கிர நிலையில் மிதுன ராசியில் நுழையப்போவதால் எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும் வியாபாரத்தில் கவனம் அதிகமாக தேவை. குடும்ப வாழ்க்கையில் நிறைய தொந்தரவுகள் ஏற்படும் வாழ்க்கை துணையோடு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எனவே விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் கவனம் தேவை சிலர் தோல் சம்பந்தமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மேலும் உணவு விஷயத்தில் எண்ணெய் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் கடினமான சூழல் நிலவும். வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. அதிகமான சிரமங்களை சந்திக்க நேரிடும். வாழ்க்கை துணையின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும். துணையிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காது ஆரோக்கியத்தை பலவீனமாக இருப்பீர்கள். ஒரு சிலருக்கு செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சற்று கவனமோடு இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் மிதுனத்தில் வகை பெற்று வக்கிரநிலையில் சஞ்சரிப்பதால் பலவிதத்தில் தடைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பல தடைகளை தாண்டி ஒரு காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது உடல்நலத்தில் அதிக கவனம் தேவை ஒரு சிலருக்கு மன அழுத்தம் தோள்பட்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்கு செவ்வாய் பகவான் மிதுனத்தில் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படும். குழந்தைகள் குறித்த கவலை அதிகரிக்கும் பெற்றோர்களை நினைத்தும் கவலைப்படுவீர்கள். தொழில் ரீதியாக உங்களின் பணியாளர்களுடன் தேவையற்ற சிக்கல்களை சந்திப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைகள் திருப்தி இல்லாத சூழலில் ஏற்படும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்னதான் லாபம் கிடைத்தாலும் அதிர்ஷ்டம் குறைவாகத்தான் இருக்கும் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் உங்களுடைய வாழ்க்கை துணையின் மீதான நல்லெண்ணம் குறைய ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்சனைகளில் அதிக பணம் செலவாகும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : குரு வக்ர பெயர்ச்சி 2025 பலன்கள்