புது வருடம் திறந்து ஒரு வாரம் கடந்துவிட்டது இந்த புது வருடத்தில் ஒவ்வொருவரும் ஒரு புதிய உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டிருப்போம் அந்த குறிக்கோளை அடைவதற்கு உற்சாகத்தோடு இந்த வருடத்தை தொடங்கி இருப்போம். எடுத்த உறுதிமொழிகளை ஒருநாள் கூட நிறைவேற்ற முயற்சிகள் எடுக்காதவர்கள் சோம்பேறித்தனமாக இருப்பவர்கள் இந்த வருடம் அப்படியே கடந்து விடுமோ என்று வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்த ஆன்மீகம் சார்ந்த ஒரு வார்த்தையை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். அது உங்களை உற்சாகத்தின் உச்சிக்கு கொண்டு போய் சேர்க்கும். அந்த வார்த்தையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புது வருடத்திற்கான நம்பிக்கை
கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் வாழ்க்கை வீணாகவே சென்று விடுமோ என்ற ஒரு பயம் உங்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கும் அதை தூக்கி வெளியில் போட்டுவிட்டு இந்த வருடம் நமக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்று முதலில் நாம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இது நிச்சயமாக உங்களை நல்ல வழிக்கு கொண்டு சேர்க்கும். நிச்சயம் நீங்கள் வெற்றியாளர்களாக மாறுவீர்கள். அதற்கு தூண்டுகோலாக ஒரு ஸ்விட்ச் வேர்ட் மட்டும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தூண்டுகோல் வார்த்தை
அந்த வார்த்தையை தினமும் காலையில் எழுந்ததும் கண்விழித்ததும் உற்சாகத்தோடு 11 முறை கூற வேண்டும் இதனை நீங்கள் சொல்லி முடித்தவுடன் உங்களுடைய முகம் மனம் அனைத்துமே மகிழ்ச்சியாக மாறும். அந்த வார்த்தை என்னவென்றால் “yes amazing jackpot” இந்த வார்த்தையை நீங்கள் வாயே திறந்து சத்தம் போட்டு எனர்ஜியோடு சொல்ல வேண்டும். காலை எழுந்து படுத்து முகம் கழுவி குளித்துவிட்டு பிறகு சொல்லலாம் அல்லது காலை எழுந்த உடனே கூட சொல்லலாம். நீங்கள் வியாபாரி ஆக இருந்தால் வியாபாரம் மோகமாக நடக்கும். சீக்கிரமாக லாபத்தை சம்பாதிப்பீர்கள் வேலைகள் சோர்வடைந்து ஒருபோதும் அமரவே மாட்டீர்கள். நீங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களாக இருந்தால் வேலையில் நீங்கள் தான் உயரத்தில் இருப்பீர்கள் அடுத்தவர்களுடைய வேலையையும் இழுத்து போட்டு செய்யும் அளவிற்கு உங்களுடைய திறமை இருக்கும். சோம்பேறி தனம் இல்லாமல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
வீட்டில் இருப்பவர்களும் சொல்லக்கூடிய வார்த்தை
இந்த வார்த்தையை வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு கூட சொல்லலாம் வீட்டை பராமரிப்பது குழந்தைகளை பார்த்துக் கொள்வது என அனைத்திற்குமே ஒரு உத்வேகம் வரும். அனைவருமே சொல்லக்கூடிய வார்த்தையாகத்தான் இந்த வார்த்தை இருக்கிறது இந்த வார்த்தையை நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் அதிர்ஷ்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். தேவைப்படுபவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நம்பிக்கை இல்லாதவர்கள் செய்ய வேண்டாம் முழு நம்பிக்கையோடு இதனை செய்தால் மட்டுமே நமக்கு நல்ல பலன் கிடைக்கும். தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த வார்த்தையை சொல்லத் தொடங்கினாலே நல்ல மாற்றங்கள் தெரியும்.
இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!