Home ஆன்மிகம் ஆடி முதல் செவ்வாயில் அம்மனை இப்படி வழிபடுங்க எவ்வளவு கடன் இருந்தாலும் அடைந்து விடும்!!

ஆடி முதல் செவ்வாயில் அம்மனை இப்படி வழிபடுங்க எவ்வளவு கடன் இருந்தாலும் அடைந்து விடும்!!

சம்பாதிக்கும் பணம் குடும்ப செலவிற்கு போதுமானதாக இல்லாத பொழுதும், தவிர்க்கமுடியாத சில நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் வாங்குவது சகஜம். அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து வாழ்க்கையை செவ்வனே நடத்த வேண்டும் என்பதே பெரியோர்களின் கட்டளை. பசியோடு கூட உறங்கலாம், கடனோடு உறங்காதே என்பது ஆன்மிகம் காட்டும் அறிவுரை. பொதுவாக நம் வீட்டில் எவ்வளவு தான் பணம் தந்தாலும் அதற்கு செலவுகளும் வந்து கொண்டே தான் இருக்கும். மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் கடன், வியாதி போன்ற கர்மவினைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கும். அதிலிருந்து தப்பிக்க நம் முன்னோர்கள் ஒரு பரிகாரம் பற்றி நமக்கு கூறியுள்ளனர். அந்த பரிகாரத்தை செய்தால் எப்படிப்பட்ட கடன் பிரச்சனை, பணப் பிரச்சனையும் தீரும் என்பது நம்பிக்கை. அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

ஆடி செவ்வாய்க்கிழமை 2024

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் ஆன்மீக ரீதியாக முக்கியமான ஒன்று. அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் திருவிழா, கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் போன்றவை நடைபெறும். ஆடி மாதம், அம்மன் வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை போன்றவை முக்கிய நாட்கள். பொதுவாக செவ்வாய்கிழமை சரியில்லாத கிழமை, இந்த கிழமையில் எந்த சுப காரியங்களையும் செய்யக் கூடாது என சொல்லுவார்கள். ஆனால் அம்மன் வழிபாடு, முருகன் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக செவ்வாய்கிழமை சொல்லப்படுகிறது. இந்த நாளில் அம்மனை வீட்டிலேயே வழிபடுவதால் எப்படிப்பட்ட தீராத கடனையும் அடைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த வழிபாட்டை எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

செவ்வாய்க்கிழமை வழிபாட்டின் மகத்துவம்

ஆடை உடுத்துவதில் இருந்து, புதிய பொருள்கள் வாங்கும் வரை நாள், கிழமை என்று பார்ப்பவர்களும் உண்டு. பொதுவாக செவ்வாய் கிழமை என்றால் சுப காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாள் கிடையாது என பலரும் நினைப்பது உண்டு. உண்மையில் செவ்வாய் கிழமை மங்களகரமானது, சிறப்புக்குரியது. செவ்வாய்க்கு மங்களன், பூமிகாரகன் என்று பெயர் உண்டு. பெயரிலேயே மங்களம் இருப்பதால், அந்நாளில் தொடங்கும் செயல் சுபமாக நிறைவேறும். ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும். தமிழ்க்கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி துவங்கும் செயல்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

கடன் அடைய ஆடி செவ்வாய் வழிபாடு

பொதுவாகவே அனைவருக்கும் வீட்டில் உள்ள கடன் அனைத்தையும் அடைக்க வேண்டும் என்பது ஒரு கனவாகும். என்னதான் கடனை அடைக்க முயற்சி செய்தாலும் சொந்த அது தள்ளிப்போகும். எனவே கடனை சீக்கிரம் அடைக்க விரும்புபவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். அதிலும் ஆடி செவ்வாய்கிழமை அன்று செய்யும் பரிகாரமானது சிறந்த பலனை கட்டாயம் வழங்கும். கடனை அடைக்க விரும்புவர்கள் ஒரு சிறிய தொகையை ஆடி செவ்வாய்கிழமையில், தனியாக எடுத்து வைக்க வேண்டும். அல்லது யாராவது கொடுக்க வேண்டி இருந்தால் இந்த நாளில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க முயற்சி செய்யலாம். எவ்வளவு அடைத்தாலும் தீராத கடன் சுமை இருப்போர் செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் அவர்களுடைய மொத்த கடனும் அடைவதற்கான வழிகள் கிடைக்கும்.

ஆடி முதல் செவ்வாய்க்கிழமையின் வழிபாட்டு முறைகள்

ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வீடு செழிக்கும். அனைவருக்கும் நன்மைகள் நடக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் படத்திற்கு வழிபாடு செய்யலாம்.

-விளம்பரம்-

ஆடி செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் வீட்டின் பூஜையறையில் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் பூஜையறையின் இரு புறமும் வைத்து வழிபடவும்.

அம்மனுக்கு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்யலாம். அம்மனுக்கு செவ்வரளி, ரோஜா என ஏதாவது ஒரு சிவப்பு நிற மலர்களால் அஷ்டோத்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

மாலை அம்மனுக்கு நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி இப்படி உங்களால் எது செய்ய முடியுமோ அதில் ஒன்று செய்து வைத்தும் வழிபடலாம்.

-விளம்பரம்-

ஆடி செவ்வாயில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும். திருமணம் ஆகாத பெண்களாக இருந்தால் திருமணம் நடக்க வேண்டும் என்று இந்த ஆடி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளலாம். ஆடி முதல் செவ்வாய் அன்று கனகதாரா ஸ்தோத்திரம் படித்து அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷம்.

இதனையும் படியுங்கள் : ஆடி மாதத்தில் விரதம் இருந்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுமா?