- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Afganistan
- Course
- Side Dish
தினமும் காலை உணவான இட்லி, தோசை, பொங்கல், பூரிக்கு எப்போதும் ஒரே மாதிரியான சைடு டிஷ் செய்து சாப்பிட்டு அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவையான அதே நேரத்தில் மிக எளிமையான ரெசிபியை செய்ய வேண்டுமா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். தினமும் சமைப்பது என்பது மிகவும் சவாலான மற்றும் போரடிக்கும் விஷயமாகும்.
அதிலும் ஒரே மாதிரியாக சமைப்பது என்பது நாளடைவிலில் சலிப்பை ஏற்படுத்தும். அதனால் முட்டையை வைத்து புதுவிதமான ரெசிபி ஒன்றை பார்க்கலாம். முட்டை ரெசிபி என்றதும் வழக்கம்போல ஆம்லெட், பொரியல் அல்லது முட்டை குழம்பு என வைக்காமல் புதிதாக ஏதாவது ருசித்து சாப்பிடுங்கள். அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் செய்யும் முட்டை கறி எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
வேகவைத்த முட்டையில் செய்யப்படும் இந்த ரெசிபி விரைவில் செய்யக்கூடியது மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்திற்கு சிறந்த காம்பினேஷனாக இருக்கும். வீட்டில் ஏதும் பொருட்கள் இல்லாத போது முட்டை மட்டும் இருந்தால் இந்த முறையில் ஒரு தடவை சமைத்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிடுவீர்கள். இப்போது ஆப்கானிஸ்தான் ஸ்டைலில் முட்டை கறி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : புதினா முட்டை வறுவல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும்!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இதனை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் முட்டையை வேக வைத்து எடுக்கவும். அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து அதனுடன் வேகவைத்த முட்டையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, சோம்பு, மிளகு சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதனுடன் உப்பு, கரம் மசாலா தூள், சீரகத்தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
பின் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆப்கானி முட்டை கறி தயார்.






