- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
முட்டை வைத்து நிறைய முட்டை வறுவல், முட்டை குழம்பு, முட்டை கிரேவி, முட்டை தொக்கு, முட்டை பிரியாணி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சி இருப்பீங்க. அந்த வகையில முட்டை வைத்து இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான புதினா முட்டை வறுவல் செய்ய போறோம். இதுல மிளகு கொஞ்சம் அதிகமா சேர்த்து ஒரு சூப்பரான காரசாரமான வறுவல் செய்ய போறோம். இந்த வறுவல் ரசம் சாதம் தயிர் சாதம் எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இந்த டேஸ்டான சூப்பரான முட்டை வறுவல் கண்டிப்பா உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். குழந்தைகளுக்கு லெமன் சாதம் தக்காளி சாதம் இந்த மாதிரி செஞ்சு கூடவே இந்த டேஸ்டான புதினா முட்டை வறுவல் செஞ்சு கொடுத்து பாருங்க.
கண்டிப்பா குழந்தைகள் டிபன் பாக்ஸ காலியாகிட்டு தான் வருவாங்க அந்த முட்டைக்காகவே மொத்தமா சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. இந்த ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க கண்டிப்பா விரும்பி சாப்டுட்டு உங்களை பாராட்டுவாங்க. இந்த ரெசிபிக்கு நம்ம ஒரு மசாலா பிரஷ்ஷா அரைச்சு செய்ய போறோம். பொதுவா எந்த ஒரு ரெசிபிக்கும் மசாலா ஃப்ரெஷ்ஷா அரைச்சு சேர்த்தா சுவை அட்டகாசமா இருக்கும். அந்த வகையில் இந்த ரெசிபியும் ரொம்ப ரொம்ப வாசனையாகவும் டேஸ்டாகவும் இருக்கும் புதினா சேர்க்கிறதால ரொம்பவே வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். இந்த மாதிரி ஒரு ரெசிபி இதுவரைக்கும் நீங்க சாப்பிட்டு இருக்க மாட்டீங்க அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான முட்டை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதனையும் படியுங்கள் : மசாலா ஸ்டஃப்டு முட்டை பணியாரம் இது போல் செய்து பாருங்கள்!!
Ingredients
Method
ஒரு கடாயில் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு மல்லி விதைகள் காய்ந்த மிளகாய் சீரகம், மிளகு, சோம்பு கருவேப்பிலை புதினா இலைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
முட்டையை வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை இரண்டாக நறுக்கி சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் கட்டிய பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கி முட்டையை சேர்த்து அரைத்து வைத்த பொடி உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கினால் சுவையான புதினா முட்டை வறுவல் தயார்.






