ஒருவருடைய வாழ்க்கையில் அவரவர்கள் அனுபவிக்க கூடிய கஷ்டங்களுக்கு காரணம் கர்ம வினைகள். கர்ம வினைகளின் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகம் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பு போன்றவை உள்ளது. அதனால் தான் பலருக்கும் கிரக தோஷம் ஏற்பட்டு அவர்கள் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படாமல் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய சூழல் உண்டாகிறது. இவை அனைத்தையும் நீக்கி செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

அக்னி நட்சத்திர பரிகாரம்
அக்னி நட்சத்திரம் மே மாதம் நான்காம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை உள்ளது. இந்த நாளில் சூரிய பகவானுடைய தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் தான் பல கோவில்களில் தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்து தெய்வங்களை குளிர்விப்பார்கள். இதனை அக்னி நட்சத்திர தோஷம் என்றும் அழைப்பார்கள். அப்படிப்பட்ட தோஷம் மிகுந்த நாளில் நாம் செய்யக்கூடிய எளிமையான தானம் நமக்கு இருக்கக் கூடிய தோஷத்தை நீக்கி செல்வ செழிப்போடு வாழ்வதற்கு உதவும்.
அக்னி நட்சத்திர தானம்
அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாளை தேர்ந்தெடுத்து இந்த தானத்தை செய்ய வேண்டும். இந்த தானத்தை செய்யும் போது குளித்து முடித்துவிட்டு சுத்தமாக எதுவுமே சாப்பிடாமல் வெறும் வயிற்றில் செய்தால் மிகவும் நல்லது கிரக தோஷங்கள் முற்றிலுமாக நீங்கும். பொதுவாகவே தானம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது உன் வாயில்லா ஜீவனுக்கு நாம் செய்யக்கூடிய தானம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பசு மாடு நாய் போன்ற உயிரினங்களுக்கு தானம் தருவதன் மூலம் தெய்வத்தின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற முடியும். சகல தெய்வங்களும் வீற்றிருக்கக் கூடிய ஒரு உயிரினமாக பசு மாடு உள்ளது அதனால் பசு மாட்டிற்கு நாம் செய்யக்கூடிய தானம் தெய்வங்கள் உடைய அருளையும் நமக்கு பெற்று தரும்.
பசு மாட்டிற்கு செய்ய வேண்டிய தானம்
அக்னி நட்சத்திரம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாள் அன்று காலையில் சுத்தமாக குளித்து முடித்து விட்டு வெறும் வயிற்றில் அருகில் இருக்கக்கூடிய பசு மாட்டிற்கு கீரைகள் அல்லது பழங்களை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். பிறகு அந்த பசு மாட்டை தொட்டு வணங்கி வழிபாடு செய்து விட்டு வர வேண்டும். இப்படி ஒரு முறை மட்டும் நாம் செய்தாலே நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும். அவை அனைத்தும் நீங்குவதோடு செல்வ செழிப்போடு வாழ்வதற்குரிய யோகமும் நம்மை தேடி வரும். எளிமையான இந்த அக்னி நட்சத்திர தானத்தை பசு மாட்டிற்கு செய்து தெய்வங்கள் உடைய அருளையும் கிரக தோஷங்களின் நிவர்த்தியையும் எளிமையாக பெற முடியும்.
இதனையும் படியுங்கள் : நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்


