ரத்த அழுத்தம் முதல் புற்றுநோயை வரை சரி செய்யும் அற்புத மூலிகைச் சாறு!

- Advertisement -

அறுகம்புல் எல்லோருக்கும் தெரியும்; ஆனா எத்தனை பேருக்கு கோதுமைப்புல் தெரியும். கோதுமை தெரியும், கோதுமை மாவு தெரியும். அதுல சப்பாத்தி, பூரி செய்வாங்க. வேற ஒண்ணும் தெரியாதுன்னுதான் எல்லோரும் சொல்வாங்க. நெல் பயிர்ல வளரக்கூடிய நாற்று மாதிரியே கோதுமை நாற்றைத்தான் கோதுமைப்புல்னு சொல்றாங்க. கோதுமைப்புல்லுக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு. கோதுமை நம்மளோட உணவு இல்லைன்னாலும்கூட அந்த புல்லை மருந்தா நினைச்சி சாப்பிட்டா நிறைய நோய்கள் சரியாகும்.

-விளம்பரம்-

வலியைப் போக்கும்

கோதுமைப்புல்லைப்பற்றி கிறிஸ்தவர்களோட புனித நூலான பைபிள் கூட சொல்லியிருக்காங்க. இன்னும் சொல்லப்போனா ஒரு அரசன் தன்னோட உடல் வலியையும், மன வலியையும் போக்குறதுக்கு என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தானாம். உடனே கடவுள்கிட்ட போய் வரம் கேட்டிருக்கான். எருதுகள் சாப்பிடக்கூடிய கோதுமைப்புல்லை சாப்பிடு, உன்னோட வலி எல்லாம் சரியாயிரும்னு கடவுள் சொன்னாராம். அந்த அரசனும் கோதுமைப்புல்லை சாப்பிட்டதால அவனோட உடல் வலி விலகி மகிழ்ச்சியா வாழ்ந்தான்னு சொல்வாங்க.

- Advertisement -

வைட்டமின் சத்துகள்

டாக்டர் தாமஸ்ன்கிறவர் கோதுமைப்புல்லைப் பற்றி ஆராய்ச்சி பண்ணி அதுல மருத்துவ குணங்கள் இருக்குங்கிறதை உலகத்துக்கு சொன்னார். கோதுமைப்புல்லுல வைட்டமின் சத்துகள், உயிர்ச்சத்துகள் நிறைய இருக்குங்கிறதை அவர் தெரிஞ்சதால தன்னோட வாழ்நாள்ல சுமார் 50 வருஷம் வெறும் கோதுமைப்புல் சாறை மட்டுமே குடிச்சி உயிர் வாழ்ந்தாராம். கோதுமைப்புல்லை பச்சையா ரத்தம்னு சொல்றாங்க. ரத்தத்தை சுத்திகரிச்சி குடல்ல சேரக்கூடிய கெட்ட பாக்டீரியா எல்லாத்தையும் அழிக்கும். ஹீமோகுளோபின் அளவைக் கூட்டக்கூடியதால ரத்த சோகையைப் போக்கும்.

இதய நோய் மூட்டு வலி

அறுகம்புல்லா இருந்தாலும் அதை பச்சையா குடிச்சா வயிறு வலிக்கும். சிலபேருக்கு செரிமானமாகாம தொல்லை கொடுக்கும். ஆனா கோதுமைப்புல் சாறை குடிக்கும்போது சிலபேருக்கு மலம் போறதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா முதல்ல அளவு குறைவா குடிச்சா ஒண்ணும் பண்ணாது. அது பழகிட்டா அதுக்கு அப்புறம் ஒண்ணும் பண்ணாது. கோதுமைப்புல்லை 21 நாள் குடிச்சா எந்த நோயா இருந்தாலும் குணமாகுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு. தலைமுடி பிரச்சினைகள் சரியாகுறதுக்கு கோதுமைப்புல் உதவியா இருக்கும். சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, பக்கவாதம், சளி, மூலம், இளநரை, பிரசவம் தொடர்பான நோய்கள், ஆஸ்துமா, கண், காது நோய்கள்னு பல பிரச்சினைகள் சரியாகும்.

புற்றுநோய்க்கு மருந்து

புற்றுநோயாளிகளுக்கு கோதுமைப்புல் சாறு நல்ல மருந்து. எந்தவித பக்கவிளைவும் இல்லாத இந்த கோதுமைப்புல் சாறை குடிச்சி பலன் பெறலாம். அறுகம்புல் ஜூஸ் குடிக்கிறதுமாதிரி கோதுமைப்புல் சாறையும் குடிக்கலாம். தினமும் 30 மில்லி அளவு கோதுமைப்புல் சாறு குடிச்சிட்டு வந்தா ரொம்ப நல்லது. முக்கியமா புற்றுநோய் பாதிப்பு வராம பார்த்துக்கிடலாம். இன்னைக்கி சூழல்ல குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்னு பாதிக்கப்படுறாங்க. அதனால இந்த கோதுமைப்புல் சாறை குடிச்சா பலன் கிடைக்கும்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here