நம் முன்னோர்களின் மருத்துவ குறிப்புகள்…தினம் 10 குறிப்புகள்…

- Advertisement -

நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாம் தினசரி வாழ்வில் நம் உடலுக்கு ஏற்படும் சிறு சிறு உடல் உபாதைகளுக்கும் எளிய முறையில் நாமளே மருத்துவம் செய்து கொள்ளலாம். நான் முன்னோர்களால் நமக்கு வழங்கப்பட்ட மூலிகை, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் முழு பயன்களை அடைவதற்காக நம் முன்னோர்களின் மருத்துவ முறைகளை சேர்த்து, இந்த உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-

மாம்பழம் :-

- Advertisement -

முக்கனிகளில் முதன்மையான கனி. மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் நல்ல கண் விழி தெரிகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும்.

வாழைப்பழம் :-

தினசரி இரவு தூங்குவதற்கு முன் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் எவ்வித தொற்று நோயும் நம்மை அணுகாது.

-விளம்பரம்-

முகம் வழுவழுப்பாக இருக்க :-

கசகசாவை எருமை பாலில் இருந்து எடுக்கப்பட்ட தயிர்யுடன் சேர்த்து அரைத்து. தினந்தோறும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி வந்தால் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி வழுவழுப்பான முகம் கிடைக்கும்.

ரத்த சோகையை போக்க :-

-விளம்பரம்-

பீர்க்கங்காய் கொடியின் வேர்ரை எடுத்து அந்த வேர்ரை வைத்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை நோய் மூற்றிலும் நீங்கும்.

குழந்தைகளுக்கு :-

குழந்தைகளுக்கு தினசரி கொய்யாப்பழம் ஒன்று சாப்பிட கொடுங்கள் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலம் பெறுகின்றனர் வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும் ஆற்றல் உடையது

வெட்டுக்காயம் குணமாக :-

நாயுருவி இலையை பறித்து. அந்த இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து வெட்டுக்காயத்தின் மீது பூசி வந்தால் விரைவில் வெட்டுக்காயம் ஆறிவிடும்.

சுகப்பிரசவமாக :-

ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பிரசவம் வரை தொடர்ந்து சாப்பிட்டால் ஆரோக்கியமான சுகப்பிரசவம் ஏற்படும்.

உடல் அரிப்பு குணம் பெற :-

வன்னி மரத்தின் இலையை பசுமாடு பால் உடன் சேர்த்து அரைத்து தினசரி ஒரு அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு முற்றிலுமாக நீங்கி குணமாகிவிடும்.

காதில் சீழ் வடிதல் குணமாக :-

வெற்றிலையை துண்டு துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி சிவந்தவுடன் இறக்கவும். காய்ச்சிய எண்ணெயை சிகாவில் பத்திரப்படுத்தவும் காலை மாலை இரண்டு சொட்டு காதில் விட்டு வர காதில் சீழ் வடிதல் நின்று விடும்.

நெஞ்சு வலி குணமாக :-

அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி வராது. அத்திப்பழத்தின் முக்கிய மருத்துவ குணமே இருதயத்தை பலப்படுத்துவது தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here