- Prep
- 5 min
- Cook
- 20 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
வார விடுமுறை நெருங்கி விட்டாலே அனைவரும் ஞாயிற்றுக்கிழமை எங்கு செல்லலாம், என்ன சமைக்கலாம் என யோசித்துக் கொண்டிருப்போம். நீங்கள் சிக்கனை வரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இந்த ரெசிபி உங்களுக்கு தான். என்னதான் நிறைய அசைவு உணவுகள் இருந்தாலும் அனைவருக்கும் ரொம்ப பிடித்தமான ஒன்று சிக்கன் தான். சிக்கன் வைத்து எவ்வளவோ ரெசிபி செய்யலாம். சிக்கன் வைத்து பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, வறுவல் என்று எக்கச்சக்கமான ரெசிபி செய்யலாம்.
அதில் இன்று சிக்கன் வைத்து ஒரு சூப்பரான ஆந்திரா சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போம். நம்ம ஊர் சிக்கன் ரெசிபிக்கும், ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ரெசிப்பிக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் காரம் தான். நம்ம ஊர் சிக்கனை விட ஆந்திரா ஸ்டைல் சிக்கன் இரட்டிப்பு மடங்கு காரமாக இருக்கும். நம்ம ஊர் சிக்கன் ரெசிபியை சுவைத்து அலுத்து போனவர்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ரெசிபி ஒரு நல்ல மாற்று.
காரத்தை விரும்புபவர்கள் இந்த ரெசிபியை அப்படியே செய்து நன்கு காரசாரமாக சாதத்திலோ அல்லது சப்பாத்தி, நான், பரோட்டா போன்றவைக்கு சைட் டிஷ் ஆகவோ இதை சுவைக்கலாம். மழைக்காலத்தில் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் காரமாக இருப்பதால் சளி பிடித்திருந்தால், அதிலிருந்து நல்ல நிவாரணமும் கிடைக்கும். இப்போது சுவையான ஆந்திரா சிக்கன் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இந்த மசாலாவை சிக்கனில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். அதன்பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு அரைத்து சேர்த்து 20 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா சிக்கன் தயார்.






